[X] Close

இந்தியா மீது மீண்டும் தீவிரவாதத் தாக்குதல் நடந்தால் பிரச்சினை: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை


  • kamadenu
  • Posted: 21 Mar, 2019 15:51 pm
  • அ+ அ-

சீனாவில் உள்ள ஒரு செய்தி சேனல், உலகிலேயே முதன் முறையாக பெண் ரோபோவை செய்தி வாசிப்பாளராக பயன்படுத்தி உள்ளது.

பல்வேறு துறைகளில் நவீன தொழில்நுட்பத்தை புகுத்தி வரும் சீனா, செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கண்காணிப்பு கருவிகள் முதல் ஓட்டுநர் இல்லாத கார்கள் வரை தயாரித்து வருகிறது.

இந்நிலையில், சீன அரசுக்கு சொந்தமான ஜின்ஹுவா செய்தி நிறுவனம், வருடாந்திர நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்பதற்காக பெய்ஜிங் வந்திருந்த பிரதிநிதிகள் பற்றிய 1 நிமிட செய்தி அடங்கிய வீடியோவை நேற்று முன்தினம் வெளியிட்டது.

இந்த செய்தியை வாசித்தது பெண் ரோபோ ஆகும். செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த ரோபோ, செய்தி வாசித்தபோது மனி தனைப் போலவே முகபாவ னைகளை வெளிப்படுத்தியது.

ஜின் ஜியோமெங் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ, குட்டை தலைமுடி, இளஞ்சிவப்பு மேலாடை, காதணி அணிந்தபடி வடிவமைக் கப்பட்டிருந்தது.

ஜின்ஹுவா செய்தி நிறுவனத் தில் செய்தி வாசிப்பாளராக பணிபுரியும் க்யூ மெங்கின் உருவத்தில் அமைந்துள்ள இந்த ரோபோவை ஜின்ஹுவா மற்றும் சோகு இன்க் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இதன் மூலம் உலகின் முதல் பெண் ரோபோ செய்தி வாசிப்பாளர் என்ற பெருமை இதற்குக் கிடைத்துள்ளது.

சீனாவின் வூசென் நகரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற உலக இணையதள மாநாட்டில், 2 ஆண் ரோபோ செய்தி வாசிப்பாளர்களை ஜின் ஹுவா நிறுவனம் அறிமுகப் படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close