[X] Close

72 - ஐ மணந்த 19... இது அமெரிக்கா அதிரிபுதிரி


almeda-errell-from-maryville-fell-in-love-with-gary-hardwick-at-birthday-party-being-thrown

  • kamadenu
  • Posted: 19 Apr, 2018 14:07 pm
  • அ+ அ-

அமெரிக்காவில் 19 வயதான இளைஞர் ஒருவர் தன்னைவிட 58 வயது மூத்தவரான பெண் ஒருவரை திருமணம் செய்திருக்கிறார்.

அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்தைச் சேர்ந்தவர் அல்மேடா எர்ரில். இவருக்கு வயது 72. சில ஆண்டுகளுக்கு முன்னர் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். அல்மேடா எர்ரில் பிறந்த நாள் நிகழ்ச்சிக்குச் சென்ற போது அங்கே அந்த விழாவில், கேரி ஹார்ட்விக் என்ற இளைஞரை சந்தித்தார். பின்னர் இருவருக்கும் நட்பு ஏற்பட்டது.  நாளடைவில் இந்த நட்பு காதலாகவும் மலர்ந்துள்ளது. இவர்களின் காதலுக்கு குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்தாலும் நாளடைவில் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அல்மேடாவும் ஹார்ட்விக்கும் திருமணம் செய்துக் கொண்டுள்ளனர். கேரி ஹார்ட்விக்கிறகு 19 வயது. அந்த மூதாட்டிக்கோ 72 வயது. 


இந்த திருமணம் குறித்து ஹார்ட்விக் கூறும்போது, ''எனக்கு இளம் பெண்கள் மீது காதல் வரவில்லை” என்று கூறியுள்ளார்.

அல்மேடா ஹார்ட்விக் திருமணத்துக்கு  சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close