[X] Close

மசூத் அசார் உயிரிழப்பு?


masood-azhar

  • kamadenu
  • Posted: 04 Mar, 2019 10:43 am
  • அ+ அ-

கடந்த பிப்ரவரி 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தாக்குதல், இந்திய நாடாளுமன்ற தாக்குதல், பதான்கோட் விமானப்படைத் தாக்குதல் உட்பட பல்வேறு தீவிரவாத தாக்குதல்களுக்கு ஜெய்ஷ் இ முகமது தலைவர் மசூத் அசார் மூளையாக செயல்பட்டார். அவரை ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி அண்மையில் அளித்த பேட்டியில், "மசூத் அசார் பாகிஸ்தானில்தான் உள்ளார். ஆனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது" என்று தெரிவித்தார்.

இஸ்லாமாபாத்தில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மசூத் அசார் கடந்த 2-ம் தேதி உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவலை பாகிஸ்தான் அரசு உறுதிப்படுத்தவில்லை.

கடந்த 26-ம் தேதி பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாமை இந்திய போர் விமானங்கள் குண்டு வீசி அழித்தது. இதில் பலத்த காயமடைந்த மசூத் அசார் மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதை ஜெய்ஷ் இ முகமது மறுத்துள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close