[X] Close

அல்கொய்தாவின் அடுத்த தலைவர் யார்? - ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்  எச்சரிக்கை


unsc-blacklists-osama-bin-laden-s-son-seen-as-successor-of-al-qaida-leader-al-zawahiri

ஹம்ஸா பின்லேடன்

  • போத்திராஜ்
  • Posted: 02 Mar, 2019 15:55 pm
  • அ+ அ-

 

 

நியூயார்க், பிடிஐ

தீவிரவாதி ஒசாமா பின்லேடன் மகன் ஹம்ஸா பின்லேடன் அல்கொய்தா தீவிரவாத அமைப்பின்  அடுத்த தலைவராக வர வாய்ப்புள்ளது என  ஐநா பாதுகாப்பு கவுன்சில் எச்சரித்துள்ளது.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தடைப்பட்டியலிலும் ஹம்ஸா பின்லேடன் உள்ளார் என்று ஐநா தெரிவித்துள்ளது. 

இதனால், ஹம்ஸா பின்லேடன் எந்த நாடுகளுக்கும் செல்வதற்குத் தடை விதிப்பது, சொத்துக்களை முடக்குவது, ஆயுதங்கள் விற்பனை தடை ஆகியவை விதிக்கப்படலாம்

அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவராக தற்போது இருக்கும் அய்மான் அல் ஜவாஹிரிக்கு அடுத்தார்போல் ஹம்ஸா பின்லேடன் அந்த அமைப்புக்கு தலைவராக வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

ஏற்கனவே ஹம்சா பின்லேடன் குறித்து தகவல் அறிவிப்போருக்கு ரூ.7 கோடி பரிசு வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்திருந்தது. இதற்கிடையே சவுதி அரேபியாவும், ஹம்ஸா பின்லேடனுக்கு வழங்கி இருந்த குடியுரிமையை ரத்து செய்து நேற்று அறிவித்தது.

இந்நிலையில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் 1267ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அல்கொய்தா தடை குழுவின் பட்டியலில், 29 வயதான ஹம்ஸா பின்லேடன் பெயரும் இடம் பெற்றுள்ளது.

இதுதொடர்பாக ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்ட அறிவிப்பில், " அல்கொய்தாவின் தலைவர் அல் ஜவாஹிரி வெளியிட்ட அறிவிப்பில், சவுதி அரேபியாவில் பிறந்த ஹம்ஸா  பின்லேடன் கொல்கொய்தா அமைப்பின் அதிகாரபூர்வ உறுப்பினர் என்று தெரிவித்துள்ளார். தீவிரவாத செயல்களுக்கு இனிமேல் ஹம்ஸாவும் ஈடுபடுவார். அல் ஜவாஹிரிக்கு அடுத்தார்போல் அந்த அமைப்புக்குத் தலைவராகவும் ஹம்ஸா வரக்கூடிய வாய்ப்பு உண்டு. ஆதலால், ஹம்ஸா பின்லேடனின் சொத்துக்களையும், நிதி ஆதாரங்களையும், பொருளாதார விஷயங்களையும் முடக்குமாறு உறுப்பு நாடுகள் செய்வது அவசியமாகும். மேலும் எந்த நாட்டுக்குள்ளும் ஹம்ஸா பின்லேடன் செல்லாதவாறு தடையும் விதிக்கப்படுவது அவசியமாகும்.

மேலும், ஆயுதங்கள், வெடிபொருட்களை நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ விற்பனை செய்வது, விமானங்கள் விற்பது, உதரிபாகங்கள் விற்பனை, தொழில்நுட்ப உதவிகள் அளிப்பது, ராணுவ ரீதியான பயிற்சிகள் அளிப்பது போன்றவற்றை அரசுகள் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.

கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ஆடியோ, வீடியோக்கள் மூலம் பேசிவரும் ஹம்ஸா பின்லேடன், தங்களுடைய ஆதரவாளர்களை அமெரிக்காவுக்கு எதிராகவும், மேற்கத்திய நாடுகளுக்கு எதிராகவும் தாக்குதல்களில் ஈடுபட தூண்டிவிட்டு வருகிறார். அதுமட்டுமல்லால் தனது தந்தை ஒசாமா பின்லேடனை கொலை செய்தமைக்கு பழிதீர்ப்பேன் என்று அமெரிக்காவை எச்சரித்துள்ளார்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close