[X] Close

அமெரிக்க வேளாண் பொருட்கள் மீதான வரியை சீனா நீக்க வேண்டும்: ட்ரம்ப்


  • kamadenu
  • Posted: 02 Mar, 2019 15:53 pm
  • அ+ அ-

சீனா அமெரிக்கா இடையே வர்த்தகம் தொடர்பான சுமூகமாக பேச்சுவார்த்தைகள் நீடித்து வருவதால் அமெரிக்க வேளாண் பொருட்கள் மீதான வரியை நீக்க வேண்டும் என்று  ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்ரம்ப் கூறும்போது, “ இருநாட்டுக்கும் இடையே வர்த்தகம் தொடர்பான சுமூகமான பேச்சுவார்த்தை நிலவுவதால் அமெரிக்காவின் வேளாண் பொருட்கள் மற்றும்  மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி உள்ளிட்டவை மீதான சீனாவின் வரிவிதிப்பை உடனடியாக நீக்க வேண்டும்.  இந்த முடிவு இரு நாட்டு விவசாயிகளுக்கும் மிகவும் முக்கியம்” என்றார்.

அமெரிக்க பொருட்களுக்கு சீனாவில் 25 % சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. ஆனால் சீன பொருட்களுக்கு அமெரிக்காவில் 2.5% வரி விதிக்கப்படுகிறது. இது நியாமான வர்த்தகம் அல்ல எனவே சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு மொத்தமாக 50 பில்லியன் டாலர்வரை 4 லட்சம் கோடி ரூபாய்  அளவிற்கு வரி விதிக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முடிவு கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சீனாவும் அமெரிக்க பொருட்கள் மீது வரி விதித்தது.

இந்த  நிலையில் அமெரிக்கா – சீனத்துக்கு இடையே கடந்த சில மாதங்களாக நிலவிவந்த வர்த்தகப் போர், சர்வதேச அளவில் விரிவடைந்துவிடுமோ என்று அஞ்சப்பட்டு வந்த நிலையில், நிலைமை சற்று சுமுகமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close