[X] Close

அபிநந்தன் பற்றி முடிவெடுக்க 2 நாட்கள் ஆகும்: பாகிஸ்தான் அறிவிப்பு


will-decide-on-status-of-indian-pilot-in-couple-of-days-pakistan

அபிநந்தன் வர்த்தமானன்

  • பால்நிலவன்
  • Posted: 28 Feb, 2019 15:38 pm
  • அ+ அ-

இந்திய விமானி அபிநந்தன் வர்த்தமான் குறித்து இன்னும் இரண்டு நாட்களில் முடிவு எடுக்கப்படும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படையினர் தாக்கி அழித்தனர். அந்தத் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டபோது, இந்திய விமானம் ஒன்றை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியபோது, அதிலிருந்த இந்திய விமானப்படை வீரரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிக்கிக்கொண்டார். அவரைப் பத்திரமாக மீட்க வேண்டும் என்று தேசம் முழுவதும் கோரிக்கை வலுத்துள்ளது.

இந்நிலையில்  வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் முகம்மது பைசல் கூறுகையில், ''புதன்கிழமை பிடிபட்ட இந்திய விமானி, பாதுகாப்பாக மற்றும் ஆரோக்கியமாக இருக்கிறார். எங்களிடம் விமானி அபிநந்தன் வர்த்தமான் பற்றிய பிரச்சினையை இந்தியா எழுப்பியது.

அவர் போர்க்கைதியா? இல்லையா? அவருக்கு என்னவிதமான மரபு பின்பற்றப்படும்? என்பது குறித்து இன்னும் இரண்டு நாட்களில் நாங்கள் முடிவெடுப்போம்'' என்று அவர் தெரிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close