[X] Close

போர் வந்தால் தைரியமாக இருங்கள்: நாட்டு மக்களிடம் பாகிஸ்தான் கோரிக்கை


  • க.சே.ரமணி பிரபா தேவி
  • Posted: 27 Feb, 2019 16:58 pm
  • அ+ அ-

போர் வந்தால் தைரியமாக இருங்கள் என்று தனது நாட்டு மக்களிடம் பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.

புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, இந்தியா மிராஜ் வகைப் போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது நேற்று (செவ்வாய்க்கிழமை)  தாக்குதல் நடத்தி அவற்றை முற்றிலுமாக அழித்தது.

இந்திய அத்துமீறலுக்குத் தகுந்த நேரம் மற்றும் இடத்தை முடிவுசெய்து பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று தெரிவித்திருந்தார்.

இந்திய தரப்பிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் விமானம் இன்று இந்திய எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்த முயன்றது. பாகிஸ்தான் விமானங்களில் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.

இந்தநிலையில் 2 பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லைக்குள் காஷ்மீரின் நவ்ஷாரா பகுதியில் அத்துமீறி நுழைந்தது. தாக்குதல் நடத்தும் திட்டத்துக்குள் அந்த விமானங்கள் இந்திய பகுதிக்குள் வந்திருக்கலாம் என தெரிகிறது.  இதையடுத்து இந்திய ராணுவ வீரர்கள் உடனடியாக பதிலடி தாக்குதலை நடத்தினர். இதையடுத்து அந்த விமானங்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றன. எனினும், அவற்றில் ஒரு விமானத்தை நமது வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.

இதனால் இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே நடப்பு சூழல் குறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் முகமது ஃபைஸல்,

இது நபிகள் நாயகத்தின் கூற்று.

உங்களின் எதிரியுடன் போரிட வேண்டும்

என்று விரும்பாதீர்கள்.

அல்லாவிடம் இருந்து

மன்னிப்பைக் கற்றுக் கொள்ளுங்கள்.

ஆனால் போருக்கான சூழல் வந்தால்,

தைரியமாக ஒருங்கள்.

வாள்களின் நிழலுக்கடியில்

சொர்க்கம் இருப்பதை உணருங்கள்.

என்று பதிவிட்டுள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close