[X] Close

மேட் இன் இந்தியா, இந்தியத் திரைப்படங்களுக்கு தடை: பாகிஸ்தான் ஆத்திரம்


indian-films-will-not-release-in-pakistan-pak-govt-after-indian-air-strikes

பாகிஸ்தான் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஹூசைன்

  • போத்திராஜ்
  • Posted: 27 Feb, 2019 11:11 am
  • அ+ அ-

 

இஸ்லாமாபாத், பிடிஐ

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பாலகோட் பகுதியில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்கள்மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியத் தொடர்ந்து, பாகிஸ்தானில் இந்தியத் திரைப்படங்களுக்குத் தடை செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த 14-ம் தேதி ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் இந்திய துணை ராணுவப் படையினர் சென்ற பேருந்து மீது ஜெய்ஷ் இ மீது முகமது தீவிரவாதி தற்கொலைப்படை தீவிரவாதி தற்கொலைப் படைத்தாக்குதல் நடத்தினார். இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்து வந்தது.

இந்நிலையில், இந்த தாக்குதல் நடந்து 12 நாட்களுக்குப் பின் நேற்று பாகிஸ்தான் ஆக்கிமிரப்பு காஷ்மீர் பகுதியில் இருக்கும் பாலகோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய விமானப்படை நேற்று அதிகாலை தாக்குதல் நடத்தினார்கள்.

 இந்த தாக்குதலில், 350-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள், தற்கொலைப்படைத் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தெரிவிக்கிறது. ஆனால், இதுபோன்ற தாக்குதல் நடக்கவில்லை என்று பாகிஸ்தான் அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்நிலையில், இந்த தாக்குதல் நடந்த நேற்றுமுதல் பாகிஸ்தானில் இந்தியத் திரைப்படங்கள் ரிலீஸ் செய்யவும், திரையிடவும் தடைவிதிக்கப்படும என்று பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

இந்தி திரைப்படங்கள் டோட்டல், தமால், லுகா சுப்பி, அர்ஜுன் பாட்டியாலா, நோட்புக், கபீர் சிங் ஆகிய திரைப்படங்கள் பாகிஸ்தானில் பல்வேறு நகரங்களில் ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால், பலாகோட் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியத் திரைப்படங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் சவுத்ரி பவாத் ஹூசைன் கூறுகையில், " நாட்டில் உள்ள சினிமை திரையிடுவோர் சங்கத்தினர் இந்தியத் திரைப்படங்களைப் புறக்கணிப்பார்கள். அதுமட்டுமல்லாமல்,  பாகிஸ்தான் மின்னணு ஊடகங்கள் ஒழுங்குமுறை ஆணையம்(பிஇஎம்ஆர்ஏ), இந்தியாவிலிருந்து அனுப்பப்படும் மேட் இன் இந்தியா விளம்பரங்களையும் ஒளிபரப்ப தடைவிதிக்கப்பட்டுள்ளது " எனத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து ஹூசைன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில் " சினிமா திரையரங்குகள், வினியோகிஸ்தர்கள் அமைப்பு இந்தியத் திரைப்படங்களை புறக்கணித்துவிட்டார்கள். பாகிஸ்தானில் இனிமேல் எந்த இந்தியத் திரைப்படங்களும் திரையிடப்படாது. அதுமட்டுமல்லாமல், மேட் இன் இந்தியா விளம்பரங்களும் இனிமேல் பாகிஸ்தானில் ஒளிபரப்பாகாது. இதற்கான உத்தரவு பாகிஸ்தான் மின்னணு ஊடகங்கள் ஒழுங்குமுறை ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது # பாகிஸ்தான்தயார்ஹே" எனத் தெரிவித்துள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close