[X] Close

சோமாலியாவில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: ஐஎஸ் ஆதரவு தீவிரவாதிகள் 35 பேர் பலி


us-airstrike-in-somalia-kills-35-al-shabab-extremists

மாதிரிப் படம்

  • பால்நிலவன்
  • Posted: 26 Feb, 2019 15:37 pm
  • அ+ அ-

சோமாலியாவில் ஐஎஸ்ஸுக்கு ஆதரவாக இயங்கி வந்த அல் ஷாபாப் தீவிரவாதக் குழுவைச் சேர்ந்த 35 பேரை அமெரிக்க ராணுவம் கொன்றதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து அமெரிக்காவால் அல் ஷபாபிற்கு எதிரான நடவடிக்கைகள் வியத்தகு முறையில் அதிகரித்துள்ளது.

2019-ம்  ஆண்டு தொடங்கி 2 மாதங்கள் நிறைவடையாத நிலையில் அமெரிக்க ராணுவம் 16 விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. பரந்து விரிந்த ஆப்பிரிக்க தேசத்தின் நெருக்கடியான பகுதிகளில் இஸ்லாமிய அரசை நிறுவுவதற்கு அதன் வன்முறை பிரச்சாரத்திற்கு நிதியளிப்பதற்காக, வரி வசூல் செய்வதற்காக அல் ஷபாப் ஆங்காங்கே நடத்திவந்த சோதனைச் சாவடிகள் கடந்த சனிக்கிழமையன்று நான்கு இடங்களில் விமானத் தாக்குதலில் அழிக்கப்பட்டன.

2018-ல் மட்டும் 50 தாக்குதல்களை அமெரிக்க அரசு ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்தியது. இந்நிலையில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) சோமாலியாவில் எத்தியோப்பியா எல்லைக்கு மிக அருகிலேயே அமெரிக்க ராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்தியது.

இதில் மத்திய ஹிரான் பிராந்தியத்தில் பாலெட்வயனேவுக்கு கிழக்கே 23 மைல் (37 கிலோ மீட்டர்)  ஒரு கிராமியப் பகுதியில் அல் ஷபாப் தீவிரவாதிகள் 35 பேர் கொல்லப்பட்டனர். இவர்கள் அல் கொய்தாவோடு தொடர்புடைய தீவிரவாதிகள் ஆவர். இந்த அல் ஷபாப் இயக்கத்தினர் தற்போது இஸ்லாமிய அரசு அமைக்கும் நோக்கத்திற்கு தங்களை ஒப்புக்கொடுத்துள்ளனர்.

இப்போராளிகள் தற்போது ஒரு சிறிய எண்ணிக்கையிலான தாக்குதல்களுக்கு இலக்கு வைத்திருந்ததை அடுத்து இத்தாக்குதலை அமெரிக்க ராணுவம் நடத்தியுள்ளது.

கென்யாவில் நடந்த கொடூரத் தாக்குதல்கள்

அல் ஷபாப் தீவிரவாத இயக்கம் சோமாலியாவில் கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இது கிராமப்புற மத்திய மற்றும் தெற்கு சோமாலியாவின் பெரும்பகுதிகள் தலைநகர் மொகாடிஷூ ஆகியவற்றின் மீது இத் தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது.

இதனை முறியடிக்க வேண்டுமெனில் நிறைய வான்வழித் தாக்குதல்களில் ஈடுபட வேண்டியிருக்கும் என்று மற்ற நிபுணர்கள் ஒப்புக்கொள்கின்றனர்

அக்டோபர் 2017-ல் சோமாலியாவின் அண்டை நாடான கென்யாவின் தலைநகரில் இந்த ஆண்டு ஒரு ஆடம்பர ஹோட்டல் வளாகத்தில் கொடூரமான தாக்குதலை நடத்தியது. இதில் 500க்கும் மேற்பட்டோர் இறந்தனர். சோமாலியாவின் வரலாற்றில் தலைநகர் மொகாடிஷூவில் நடத்தப்பட்ட இந்த மிகப்பெரிய தாக்குதலுக்கு பின்னால் அல் ஷபாப் இயக்கமே செயல்பட்டு வருகிறது.

சோமாலியாவில் பல பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாகவே அமெரிக்க ராணுவம் அங்கு செயல்பட்டு வருகிறது. கென்யா மற்றும் எத்தியோப்பியாவிலிருந்து இயங்கும் ஒரு பன்னாட்டு ஆப்பிரிக்க ஒன்றியக்குழு மற்றும் துருப்புகளோடு இணைந்து இந்தப் பாதுகாப்பு நடவடிக்கையை அமெரிக்கா நடத்தி வருகிறது.

சோமாலியா அரசோடு இணைந்து தங்கள் ராணுவப் பணிகளை செய்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதன் ராணுவம் அடுத்த சில ஆண்டுகளில் நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியப் பொறுப்பை எடுத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பரிதாபமான சோமாலியா ராணுவம்

ஆப்பிரிக்க ஒன்றியத்தின் படைகள் படிப்படியாக திரும்பிச் சென்றுகொண்டிருக்கும் வேளையில், தங்கள் நாட்டு பாதுகாப்புக்காக சோமாலியப் படைகள் இன்னமும் தயாராக இல்லை என்று அமெரிக்க ராணுவம் எச்சரித்துள்ளது.

சோமாலியாவிற்கு பொருளாதார உதவிகளைச் செய்வதற்காக வந்துள்ள ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு,  அந்நாட்டின் ராணுவத்தைப் பற்றி மிக மோசமான விமர்சனத்தை வைத்துள்ளது.

சோமாலியா ராணுவம் பெருமளவில் மிகவும் ஏழ்மை வெளிப்படும் சீருடைகளும் மலிவான ஆயுதங்களுமே வைத்துள்ளன. சில நேரங்களில் தங்கள் ஆயுதங்கள் அல்லது சீருடைகளை சில்லறை பணத்திற்குக்கூட விற்றுவிடுகிறார்கள் என்று ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close