[X] Close

தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் தப்பிஓடிய இந்திய விமானங்கள்: பாக்., ராணுவ தளபதி கிண்டல் ட்வீட்


pakistan-army-general

  • பாரதி ஆனந்த்
  • Posted: 26 Feb, 2019 11:47 am
  • அ+ அ-

பாகிஸ்தானின் கைபர் பக்துவான் பகுதியில் இந்திய விமானப்படை விமானங்கள் 1000 கிலோ வெடிப் பொருளை வீசி தீவிவரவாத முகாம்களை அழித்துள்ள நிலையில் பாகிஸ்தான் ராணுவத் தளபதியோ கிண்டலாக டீவ்ட் பதிவு செய்திருக்கிறார்.

இந்தியா நடத்திய தாக்குதல் குறித்து பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிப் கஃபூர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்திய விமானப்படை எல்லை கட்டுப்பாட்டு கோட்டை அத்துமீறி பாகிஸ்தானுக்குள் நுழைந்துள்ளது. ஆனால், பாகிஸ்தான் விமானப் படை உடனடியாக பதில் தாக்குதல் நடத்தியது. இதனால், இந்திய விமானங்கள் திரும்பிச் சென்றன. 

முசாபர்பாத் செக்டாரில் இந்திய விமானங்கள் அத்துமீறி நுழைந்தபோது உரிய நேரத்தில் பாகிஸ்தான் தகுந்த பதிலடி கொடுக்க அவசர அவசரமாக வெற்று இடத்தில் வெடிப்பொருளை போட்டுவிட்டு இந்திய விமானங்கள் தப்பியோடின.

பாலாகோட் பகுதியில் வெடிப்பொருள் விழுந்துள்ளது. இதில் எவ்வித உயிர்ச்சேதமும் இல்லை. பொருட்சேதமும் இல்லை. மேலும், தொழில்நுட்ப தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன" என அடுத்தடுத்த ட்வீட்களில் பதிவிட்டிருக்கிறார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close