[X] Close

நாங்க கவலைப்படமாட்டோம்: நதிநீர் பகிர்வை நிறுத்தும் இந்தியாவின் பேச்சுக்கு பாகிஸ்தான் பதில்


not-concerned-if-india-diverts-water-from-3-eastern-rivers-says-pakistan

  • போத்திராஜ்
  • Posted: 22 Feb, 2019 13:38 pm
  • அ+ அ-

 

 இஸ்லாமாபாத், ஏஎன்எஸ்

கிழக்கில் இருந்து பாயும் பியாஸ், ராவி, சட்லெஜ் நதி நீரை இந்தியா தடுத்தால், திசைமாற்றினால் செய்தால் நாங்கள் கவலைப்படமாட்டோம் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

 புல்வாமாவில் தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. வர்த்தக ரீதியாக நட்பு நாடு எனும் அந்தஸ்தை ரத்து செய்தது, பாகிஸ்தானிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. இந்நிலையில், கிழக்குநோக்கி பாகிஸ்தானுக்குள் பாயும் பியாஸ், ராவி, சட்லஜ் ஆகிய நிதிகளை தடுத்து நிறுத்தப் போவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.

 இதுகுறித்து பாகிஸ்தான் நீர்வளத்துறை அமைச்சகத்தின் செயலாளர் கவாஜா சுமெயில், டான்நியூஸ்க்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கிழக்குநோக்கி பாகிஸ்தானுக்குள் பாயும் பியாஸ், ராவி, சட்லஜ் நதிகளை இந்தியா தடுத்து நிறுத்தினாலும் சரி, அல்லது மக்கள் பயன்பாட்டுக்கு இல்லாமல் வேறு பக்கம் திருப்பினாலும் நாங்கள் கவலைப்படமாட்டோம். சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா மதிக்காவிட்டாலும் நாங்கள் கவலைப்படமாட்டோம்.

 ஆனால், மேற்கு நோக்கிப் பாயும் சீனப், இன்டஸ், ஜீலம் நதிநீரை தடுத்தால், வேறுபக்கம் திருப்பினால், நிச்சயம் எங்களுடைய கவலைகளை, எதிர்ப்பைத் தெரிவிப்போம் " எனத் தெரிவித்தார்.

 சிந்து நதிநீரின் பாகிஸ்தானுக்கான ஆணையர் சயத் மெஹர் அலி ஷா கூறுகையில், " கடந்த 1960-ம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி, கிழக்குநோக்கி பாயும் நிதிகளை இந்தியா பயன்படுத்திக்கொள்ளச் சிந்து நிதிநீர் ஒப்பந்தம் அனுமதி வழங்கியுள்ளது. அந்த நதிநீரை பயன்படுத்தினாலும் சரி அல்லது திருப்பிவிட்டாலும் எங்களுக்கு எந்தவிதமான கவலையும் இல்லை " எனத் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close