[X] Close

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: இந்தியர் பலி


  • kamadenu
  • Posted: 21 Feb, 2019 17:13 pm
  • அ+ அ-

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டார்.

இதுகுறித்து உள்ளூர் ஊடகங்கள் தரப்பில், ''அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள பல்பொருள் அங்காடியில் நுழைந்த இரு நபர்கள் திருடும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணிபுரிந்த கோவர்தன் ரெட்டி (50)  என்பவரை அந்த நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் கோவர்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்'' என்று செய்தி வெளியானது.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்கள் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் என்றும் அவர்கள் அந்தப் பல்பொருள் அங்காடியிலிருந்து எந்தப் பணத்தையும் எடுத்துச் செல்லவில்லை என்றும் தகவல் வெளியானது.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொல்லப்பட்ட கோவர்தன் தெலங்கானா மாநிலத்தின் யாததிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் 7 ஆண்டுகளுக்கு முன்னர்தான் அமெரிக்காவுக்குப் பணிக்காகச் சென்றார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

கொல்லப்பட்ட கோவர்தன் உடலை இந்தியா கொண்டு வர தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அங்குள்ள தெலுங்கு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close