[X] Close

‘‘மாற்றத்தை நோக்கி நகரும் இந்தியா’’ - தென்கொரியாவில் பிரதமர் மோடி பெருமிதம்


  • kamadenu
  • Posted: 21 Feb, 2019 15:56 pm
  • அ+ அ-

இந்தியா மாற்றத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது என்று தென்கொரியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள மோடி தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி தென்கொரியா இன்று (வியாழக்கிழமை) சென்றடைந்தார்.

பிரதமர் மோடிக்கு சியோல் விமான நிலையத்திக் தென் கொரியா தரப்பில் சிறப்பு வரவேற்பு வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மோடி தென்கொரியாவிலுள்ள இந்திய சமூகத்தினரை சந்தித்தார்.

தென்கொரிய அதிபர் மூன் மற்றும்  அந்நாட்டு  தொழிலபதிர்களுக்குடனான சந்திப்பில் பங்கேற்றார் மோடி.

இதில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசும்போது, ‘‘இந்தப் பயணம் இந்தியா - வடகொரியா இடையே பல துறை உறவை வலுப்படுத்தும். குறிப்பாக வர்த்தகம் மற்றும் முதலீடு.  இந்தியா - தென்கொரியா இடையே நிலவும்  அறிவியல் , தொழில் நுட்பம் சார்ந்த ஈடுபாடுகள் மேம்பட்ட விஞ்ஞானம் சார்ந்த ஆரய்ய்ச்சுகளுக்கு ஊக்கமளிக்கும்.

இந்தியா வாய்ப்புகள் உருவாகும் இடமாக  உள்ளது. ஒரே எண்ணத்தை கொண்டவர்களை இந்தியா தனது கூட்டாளியாக வைத்துள்ளது. இதில் தென்கொரியா உண்மையான  நட்பு நாடாக இருக்கிறது.

இந்தியா சிறந்த மாற்றத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. இந்தியாவில்  வேளாண்மை சார்ந்த பொருளாதாரம் மாறி வருகிறது. இந்த பொருளாதாரமே தொழில் நிறுவனங்களை வழி நடத்துகிறது ” என்றும் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close