[X] Close

காஷ்மீர் தாக்குதலுக்கு நியூசிலாந்து கண்டனம்


new-zealand-parliament-unanimously-passes-motion-condemning-pulwama-terror-attack-dy-pm-winston-peters-expresses-solidarity-with-india

  • kamadenu
  • Posted: 20 Feb, 2019 16:01 pm
  • அ+ அ-

காஷ்மீரில் புல்வாமாவில் இந்திய ராணுவ வீரர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நியூஸிலாந்து கண்டனம்  தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில், ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் இந்திய துணை ராணுவப்படையினர் 40 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தியா மட்டுமில்லாமல் உலக நாடுகளிடையே இந்தத் தாக்குதல் பெரும் அதிர்ச்சி அடையச் செய்தது.

மேலும் இந்தத் தாக்குதல் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவிய விரிசல் மேலும் அதிகமாகி மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது நியூஸிலாந்து புல்வாமா தாக்குதலுக்கு கண்டனத் தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

இந்தத் தீர்மானத்தை  நியூசிலாந்து துணை பிரதமர் வின்சென்ட் பீட்டர்ஸ் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தார்.

அதில், இந்த நாடாளுமன்றம் பிப்ரவரி 14-ம் தேதி  இந்திய மத்தியப் பிரிவு போலிஸ் படையின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டிக்கிறது. எங்களது ஆழ்ந்த வருத்தங்களை இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த விவகாரத்தில் இந்தியாவுக்குத் துணை நிற்போம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close