[X] Close

அண்டை நாடுகளுடன் இணைந்து பணியாற்றத் தயார்: ஈரான் அதிபர்


  • kamadenu
  • Posted: 18 Feb, 2019 16:56 pm
  • அ+ அ-

ஈரான் அதன் அண்டை நாடுகளுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளில் சவுதி அரேபியாவுக்கும், ஈரானுக்கும் நீண்ட காலமாக அதிகாரப் போட்டி நிலவுகிறது. சிரியா, ஏமன் நாடுகளில் நடக்கும் போர்களில் இரு நாடுகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இந்த நிலையில் தனது அண்டை நாடுகளுடன் பணியாற்றத் தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஹார்மோசான் மாகாணத்தில் ஈரான் அதிபர்  ஹசன் ரவ்ஹானி கூறும்போது, ''மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி ஏற்படுத்துவதற்கு ஈரான் அதன் அண்டை நாடுகளோடு பணியாற்றத் தயாராக உள்ளது.

நாங்கள் இந்த பிராந்தியத்தில் சகோதரத்துவமான உறவையே விரும்புகிறோம்.  அமெரிக்காவும், இஸ்ரேலும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாக நினைக்க வேண்டாம். அது தவறு. முஸ்லிமாகிய நாம்தான் இந்த பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த முடியும்'' என்றார்.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது என்றும் கடுமையாக ட்ரம்ப் விமர்சித்தார். இதனைத் தொடர்ந்து ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது.

ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன. ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியவுடன் அந்த நாட்டின் மீது பொருளாதரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close