[X] Close

‘‘பாகிஸ்தான் மக்களின் மனங்களை வென்று விட்டார்’’ - சவுதி இளவரசருக்கு கார் ஓட்டிய இம்ரான் கான்


crown-prince

  • நெல்லை ஜெனா
  • Posted: 18 Feb, 2019 15:52 pm
  • அ+ அ-

பாகிஸ்தான் அரசின் நடைமுறைகளை புறந்தள்ளி விட்டு சவுதி இளவரசருக்கு கார் ஓட்டிச் சென்ற இம்ரான் கான், தான் சவுதியின் தூதர் என பெருமிதத்துடன் கூறினார்.

புல்வாமா தாக்குதல் சம்பவத்தால் இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் சூழல் நிலவி வருகிறது. இதனால் பாகிஸ்தானுக்கு வருகை தர திட்டமிட்டு இருந்த சவுதி இளவரசர் பின் சல்மான் மூன்று நாள் தாமதத்துக்கு பிறகு பாகிஸ்தான் சென்றுள்ளார்.

பாகிஸ்தான் சென்ற சவுதி இளவரசர் சல்மானை பாகிஸ்தான் நாட்டின் வழக்கமாக பின்பற்றப்படம் வழக்கமான அரசு நடைமுறைகளை புறந்தள்ளி விட்டு தனது காரில் அழைத்து வந்தார் பிரதமர் இம்ரான் கான். காரை இம்ரான் கானே ஓட்டி வந்தார்.

இதைத்தொடர்ந்து இரு தலைவர்களின் சந்திப்பில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அத்துடன், ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் உதவித்தொகை மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களும் செய்யப்பட்டன.

பின்னர் இதுகுறித்து இம்ரான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சவுதியில் பணியாற்றும் 25 லட்சம் பாகிஸ்தானியர்களின் சார்பாக வைத்த கோரிக்கையை சவுதி இளவரசர் ஏற்றுக் கொண்டுள்ளார். சவுதி அரேபியாவுக்கான பாகிஸ்தான் தூதராக என்னை ஏற்றுக் கொண்டுள்ளார். பாகிஸ்தான் மக்களின் மனங்களை சவுதி இளவரசர் வென்று விட்டார்’’ எனக் கூறியுள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close