[X] Close

கார் ஓட்டி விபத்து: ஓட்டுநர் உரிமத்தை சரண்டர் செய்த 97 வயது இளவரசர் பிலிப்


prince-philip-97-gives-up-driver-s-license-after-january-crash

  • க.சே.ரமணி பிரபா தேவி
  • Posted: 11 Feb, 2019 12:12 pm
  • அ+ அ-

காரை ஓட்டி விபத்துக்குள்ளாக்கிய  97 வயது இங்கிலாந்து இளவரசர் பிலிப், தனது ஓட்டுநர் உரிமத்தை தானாக முன்வந்து சரண்டர் செய்துள்ளார். இத்தகவலை பக்கிங்ஹாம் அரண்மனை உறுதி செய்துள்ளது.

இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப். அவர் கடந்த மாதம் தன்னுடைய குண்டு துளைக்காத லேண்ட்ரோவர் காரை ஓட்டியபோது வேனின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார்.

விபத்துக்குள்ளான வாகனத்தில் இரண்டு பெண்களும் 9 மாத ஆண் குழந்தையும் இருந்தனர். இதில் ஒரு பெண்ணின் மணிக்கட்டு உடைந்தது. மற்றொருவர் லேசாக காயமடைந்தார். பின் சீட்டில் இருந்த குழந்தைக்கு அதிர்ஷ்டவசமாகக் காயம் எதுவும் ஏற்படவில்லை. இதில் இளவரசர் பிலிப் காயங்கள் ஏதுமின்றித் தப்பினார். இந்த சம்பவம் பலத்த விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இளவரசர் பிலிப், தனது ஓட்டுநர் உரிமத்தை தானாக முன்வந்து சரண்டர் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட அறிவிக்கையில், ''கவனமான பரிசீலனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இளவரசர் பிலிப் தானாக முன்வந்து தன்னுடைய ஓட்டுநர் உரிமத்தை விட்டுக் கொடுக்கிறார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கார் விபத்து நடந்தவுடன் இளவரசர் பிலிப் மன்னிப்பு கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'எல்.கே.ஜி' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close