[X] Close

நீல் ஆம்ஸ்ட்ராங்குடன் நிலவுக்குச் சென்ற புஸ் ஆல்ட்ரின் பாப் பாடகியைப் பாராட்டிய நெகிழ்ச்சி சம்பவம்


nasa-exchanges-tweets-with-ariana-grande-over-her-song

புஸ் ஆல்ட்ரின், அன்றும் இன்றும், (கடைசிப்படம்) அமெரிக்க பாப் பாடகி அரியனா கிராண்டே

  • பால்நிலவன்
  • Posted: 09 Feb, 2019 19:17 pm
  • அ+ அ-

சமீபத்தில் நாசா என்ற பாடலை வெளியிட்டு ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த பாப் பாடகிக்கு  நீல் ஆம்ஸ்ட்ராங்குடன் நிலவுக்குச் சென்ற புஸ் ஆல்ட்ரின் ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ள சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதை என்னால் நம்ப முடியவில்லை என்று பாடகி  தெரிவித்துள்ளார்.

பாப் நட்சத்திரமான அரியனா கிராண்டின் புதிய 'நாசா' பாடல்தான் அமெரிக்க விண்வெளி நிறுவனத்திற்கும் பாடகிக்கும் இடையில் ட்வீட் பரிமாற்றத்திற்கு வழிவகுத்தது.

இப்பாடல் விண்வெளி ஆய்வு மற்றும் பிரபஞ்சத்தைப் பற்றிய குறிப்புகளுடன் இந்தப் பாடல் 'நாசா' என்ற அதன் பெயரைக் கொண்டுள்ளதாக ஸ்பேஸ்.காம் வலைப்பக்கமும் தெரிவித்துள்ளது.

நாசா பாடலின் ஆரம்ப வரிகள் இப்படித் தொடங்குகிறது: "இது பெண்ணுக்கு ஒரு சிறிய படியாகும், பெண்ணினத்துக்கோ ஒரு பெரிய பாய்ச்சல். நான் பிரபஞ்சத்தைப் போன்றிருக்கிறேன், நீ  நா-சா-வா-க இருக்கிறாய்...'' என்ற பாடல் வரிகள் வரும்போது சற்றே அடங்கிய தொனியிலான நீல் ஆம்ஸ்ட்ராங்கின் குரலும் ஒலிக்கிறது.

ட்விட்டரில் அரியனா கிராண்டைப் பாராட்டும் நாசா பதிவுகளை அடுத்து பாடகியின் பதில் ட்வீட்டுக்கு உடனுக்குடன் மின்னணு பதில்கள் வந்தன.

ட்விட்டரில் பாடகியுடனான ஆரம்பப் பதிவாக ''ஹாய் அரியனா கிராண்டே, தங்கள் 'நாசா' பாடல் டிரெண்டிங்கில் இடம் பிடித்ததைக் கண்டோம்.

முதலில் எங்களின் புதிய கண்டுபிடிப்புகளில் ஒன்று என நினைத்துவிட்டோம். ஆனால் நாசாவில் உங்களுக்கும் ஒரு இடம் தேவை என்பதை நாங்கள் உணர்ந்தோம்.'' என்று நாசா தெரிவித்தது.

இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவெனில் நிலவில் நீல் ஆம்ஸ்ட்ராங்குடன் காலடி வைத்த புஸ் ஆல்ட்டிரினும் உரையாடலில் இணைந்துகொண்டார் என்பதுதான்.

அப்போது ''புஸ் தங்களிடம் முழு ஆல்பமும் நிச்சயம் இருக்கமுடியும்'' என்று பாடகி கூற, அதற்கு நிலவுக்கு சென்றுவந்த விஞ்ஞானி புஸ் ஆல்ட்ரின் தன் பதிவில்,  ''உன்னுடைய @ArianaGrande பாடல்களில் ஒன்றையாவது என்னால் உருவாக்க முடியும் என்று நினைக்கிறாயா?'' என்று கேட்டார்.

நாசா விஞ்ஞானிகளின் இத்தகைய பாராட்டு கிடைத்தது குறித்து தன்னால் நம்ப முடியவில்லை என்று aரியனா கிராண்டின் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். இவ்வுரையாடல்களை ட்வீட்டர் வாயிலாக இணைய உலகமே கவனித்து வந்தது.

முன்னர், பல சந்தர்ப்பங்களில், கிராண்டின் தனது ஆடைகள் மீது நாசா லோகோ அணிந்து, ட்விட்டரில், பிரபஞ்சம் மற்றும் வியாழன் மற்றும் நெப்டியூன் போன்ற கிரகங்கள் மீதான தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

நீல் ஆம்ஸ்ட்ராங்குடன் நிலவுக்குச் சென்ற புஸ் ஆல்ட்ரின் 1930-ல் பிறந்தவர். 90 வயதிலும் பாப் பாடல்களைக் கேட்பதும் இளைஞர்களைப் போல ட்விட்டரில் உரையாடுவதும் குறிப்பிடத்தக்கது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close