[X] Close

ட்ரம்ப் - கிம் மீண்டும் சந்திக்க ஏற்பாடு: வியட்நாமில் 27, 28-ம் தேதி பேச்சுவார்த்தை


trumph-kim-meets-again

  • kamadenu
  • Posted: 07 Feb, 2019 08:08 am
  • அ+ அ-

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகிய இரு தலைவர்களும் 2-வது முறையாக வியட்நாமில் வரும் 27, 28 தேதிகளில் சந்தித்து பேச உள்ளனர். இந்த சந்திப்புக்கு வியட்நாமை தேர்ந்தெடுத்தது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளும் ஐ.நா. பாதுகாப்பு கவுன் சிலும் கடும் எதிர்ப்பு தெரிவித் தன. வடகொரியா இதை பொருட் படுத்தவில்லை. இதையடுத்து, அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஆண்டு தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, தென்கொரியாவின் நட்பு நாடான அமெரிக்காவின் அதிபர் ட்ரம்ப், கிம்மை சந்திக்க விருப்பம் தெரிவித்தார்.

இதையடுத்து முதன்முறையாக இரு தலைவர்களும் சிங்கப்பூரில் சந்தித்துப் பேசினர். அப்போது, அணு ஆயுதங்களை அழிக்க வடகொரியா ஒப்புக் கொண்டது. இதற்கு பிரதிபலனாக, பொருளா தார தடைகளை விலக்கிக் கொள்ள அமெரிக்க ஒப்புக் கொண்டது. இது தொடர்பாக இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், இரு தலைவர் களும் வரும் 27, 28 தேதிகளில் வியட்நாமில் 2-வது முறையாக சந்தித்துப் பேச முடிவு செய்துள்ள தாக தகவல் வெளியாகி உள்ளது.

வடகொரியாவைப் போலவே, ஒரு காலத்தில் வியட்நாமும் அமெரிக்காவின் எதிரி நாடாக விளங்கியது. இவ்விரு நாடுகளுக் கிடையே போர் நடைபெற்றது. ஆனால் இந்தப் போருக்குப் பிறகு ஆசியாவிலேயே வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாக வியட்நாம் உருவெடுத்தது. இப் போது அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றாக வியட்நாம் உள்ளது. தென் சீன கடல் பகுதி விவகாரத்தில் வியட்நாமுக்கும் சீனாவுக்கும் பிரச்சினை உள்ளது. இதனால், வியட்நாமுக்கு ஆதர வாக அமெரிக்கா செயல்படுகிறது.

இதுபோல வடகொரியாவும் வியட்நாமின் நெருங்கிய நட்பு நாடாக உள்ளது. அங்கு அமெரிக்கா மற்றும் வடகொரியாவின் தூதரகங்கள் அமைந்துள்ளன. மேலும் கம்யூனிஸ்ட் நாடான வியட்நாமில் எப்போதுமே பாது காப்பு பலமானதாக இருக்கும். எந்த ஒரு நிகழ்ச்சியிலும் ஊடகங்கள், பொதுமக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக் கப்படுவது வழக்கம். இதனால்தான் வியட்நாமில் சந்தித்துப் பேச இருவரும் முடிவு எடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை வியட்நாம் செய்து வருகிறது. இதன்மூலம் சர்வதேச அளவில் தனது அந்தஸ்து உயரும் என அந்த நாடு கருதுகிறது. குறிப்பாக, சுற்றுலா மற்றும் வெளிநாட்டு முதலீடு அதிகரிக்க இந்த சந்திப்பு உதவும் என வியட்நாம் கருதுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close