[X] Close

வியட்நாமில் சந்திக்கும் கிம் - ட்ரம்ப்


second-trump-and-kim-summit-to-be-held-in-vietnam-within-weeks

  • இந்து குணசேகர்
  • Posted: 06 Feb, 2019 18:23 pm
  • அ+ அ-

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வடகொரிய அதிபர் கிம்மை இரண்டாவது முறையாக சந்திக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை பேசும்போது,  ''நமது பணயக் கைதிகள் திரும்பி வந்தடைந்தனர். அணு ஆயுத சோதனைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடந்த 15 மாதங்களுக்கு மேலாக எந்த அணு ஆயுத சோதனையும் நடக்கவில்லை. நான் ஒருவேளை அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படாமல் இருந்திருந்தால் வடகொரியாவுடன்  போர் ஏற்பட்டிருக்கும்.  வடகொரிய அதிபர் கிம்முடன் நல்ல நட்புறவில் நான் உள்ளேன்'' என்றார்.

மேலும் இம்மாத இறுதியில் ( பிப்ரவரி 27, 28) வடகொரிய அதிபர் கிம்மை வியட்நாமில் சந்திக்க இருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இரண்டாவது முறையாக ட்ரம்ப் - கிம் சந்திப்பு நடைபெற உள்ளது உறுதியானது.

அமெரிக்கா - வடகொரியா மோதலும் இணக்கமும்

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதில் இரண்டு சோதனைகள் ஜப்பான் கடலுக்கு அருகில் நடத்தப்பட்டன. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.

ஆனால், எதிர்ப்புகளைச் சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.

எனினும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைப் பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்ததது.

இந்த நிலையில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதுமுதல் வடகொரியா - தென் கொரியா உறவில் இணக்கம் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து ட்ரம்ப் - கிம் இடையே சிங்கப்பூரில் சந்திப்பு ஏற்பட்டது.

இந்தச் சந்திப்பில் அணு ஆயுதங்களை அழிக்க வடகொரியா சம்மதம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close