[X] Close

நேருக்கு நேர் மோதல்: சிங்கத்தைக் கொன்ற இளைஞர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி


  • க.சே.ரமணி பிரபா தேவி
  • Posted: 06 Feb, 2019 18:23 pm
  • அ+ அ-

அமெரிக்க மலையடிவாரத்தில், சிங்கத்துடன் நேருக்கு நேர் மோதிய இளைஞர், சண்டையில் சிங்கத்தைக் கொன்றார். தற்போது அவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்கு அமெரிக்காவில் உள்ள கொலோரடோ பகுதியின் மலையடிவாரத்தில் சிங்கங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இவை பூமா என்று அழைக்கப்படுகின்றன.

இந்நிலையில் மலையடிவாரத்தில் இளைஞர் ஒருவர் நடந்துகொண்டிருந்தார். அவரைப் பார்த்த மலை சிங்கம் ஒன்று, எதிர்பாராத விதமாகப் பதுங்கி வந்து  பாய்ந்தது. பின்புறத்தில் இருந்து தாக்கப்பட்ட இளைஞர் பயந்து ஓடவில்லை. அதற்குப் பதிலாக கத்திக்கொண்டு, கைகளை உயர்த்தியவாறே போராடத் தயாரானார்.

மீண்டும் தாக்கிய சிங்கம், தனது பற்களால் இளைஞரின் மணிக்கட்டைக் கவ்வி இழுத்தது. இதில் இளைஞரின் முகம், மணிக்கட்டில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. சுதாரித்த இளைஞர், சிங்கத்தின் தலையைப் பிடித்து அருகில் இருந்த பாறையின்மீது மோதினார். சிங்கம் அவரது மணிக்கட்டை விடும்வரை மோதிக்கொண்டே இருந்தார்.

இதில் அவரின் மணிக்கட்டை விடுவித்த சிங்கம், உயிரிழந்தது. இதனிடையே காயங்களுடன் அந்த இளைஞர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து கொலோரடோவின் முன்னணி நாளிதழான டென்வர் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close