[X] Close

சிரியாவுக்கு முழுமையாக பாதுகாப்பு அளிப்பதே இலக்கு: ஈரான் அதிபர்


stability-and-security-of-syria-an-important-goal-for-iran

  • இந்து குணசேகர்
  • Posted: 06 Feb, 2019 18:17 pm
  • அ+ அ-

சிரியாவுக்கு முழுமையான பாதுகாப்பு மற்றும் நிலைப்புத்தன்மை  தருவதே ஈரானின் இலக்கு என்று ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கூறும்போது, ''ஈரான் முக்கியமான வெளியுறவுக் கொள்கைகளில் சிரியாவில் நிலைப்புத்தன்மை மற்றும் முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்துவதுதான் முக்கிய இலக்கு. சிரியா பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். சிரிய மக்கள் அவர்களது வாழ்க்கையை வாழ வேண்டும்'' என்றார்.

சிரியாவின் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் 2014 ஆம் ஆண்டு முதல் சண்டையிட்டு வருகிறார்கள்.

சுமார் ஆறு ஆண்டுகளாக நடக்கும் சிரிய போரில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும், பஷார் அல் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்யாவும் ஆதரவு அளித்து வருகின்றன. இதில் கிளர்ச்சியாளர்களின் வசமிருந்த பெரும்பாலான பகுதிகளை  சிரிய அரசுப் படைகள் கைப்பற்றியுள்ளன. மீதமுள்ள பகுதிகளைக் கைப்பற்ற இறுதிக்கட்டப் போர் அங்கு நடந்து கொண்டிருக்கிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close