[X] Close

அந்த ஒராங்குட்டான் குட்டிக்கு அப்பா யார்?- ஸ்விஸ் உயிரியல் பூங்காவில் சுவாரஸ்யம்


who-s-the-daddy-surprise-in-swiss-orangutan-paternity-test

  • பாரதி ஆனந்த்
  • Posted: 02 Feb, 2019 13:01 pm
  • அ+ அ-

ஸ்விட்சர்லாந்தின் பசேல் உயிரியல் பூங்காவில் 5 மாதமே ஆன ஒராங்குட்டான் குட்டி பத்மாவின் தந்தை யார் என்பதில் குழப்பம் ஏற்பட டி.என்.ஏ., பரிசோதனையில் ஒரு சுவாரஸ்யமான உண்மை தெரியவந்துள்ளது.

வடமேற்கு ஸ்விட்சர்லாந்தில் பசேல் உயிரியல் பூங்கா இருக்கிறது. பூங்காவில் ஒராங்குட்டான் குரங்குகள் பராமரிக்கப்படுகின்றன. இந்த வகை அழிந்து வருவதால் அவற்றை இனப்பெருக்கம் செய்வதில் பூங்கா தனிக்கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு முறையும் பூங்காவில் ஒராங்குட்டான் குட்டி பிறக்கும்போதும் அதனுடைய மரபணுக்களை சோதனை செய்வது வழக்கமாக இருக்கிறது.

அப்படித்தான் புதிய குட்டி பத்மாவின் மரபணுவும் சோதனை செய்யப்பட்டிருக்கிறது. பத்மாவின் அம்மா மஜாவை புட்டி என்ற 14 வயது ஆண் ஒராங்குட்டானுடன் அடைத்துவைத்திருந்தனர் பூங்கா ஊழியர்கள். இணைசேருவதற்கு ஏதுவாக அவை ஒரே கூண்டில் அடைக்கப்பட்டிருந்தன.
மரபணு சோதனையின்போது பத்மாவின் தந்தை புட்டி அல்ல என்று தெரியவந்தது. மஜாவோ கூண்டுக்குள்ளேயே தான் இருந்திருக்கிறது.

இதனால் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். பூங்காவில் இருந்த மற்ற ஆண் ஒராங்குட்டான்களின் மரபணுவுடன் பத்மாவின் மரபணுவை ஒப்பிட்டுப் பார்த்துள்ளனர். அப்போது மஜாவின் கூண்டுக்கு அடுத்த கூண்டில் இருந்த வெண்டல் என்ற 18 வயது ஒராங்குட்டனுடன் பத்மாவின் மரபணு ஒத்துப் போயுள்ளது. மஜா, வெண்டல் கூண்டுகளுக்கு நடுவே இரும்பு வேலி இருக்கிறது. ஆனால் வேலி கடந்து மஜா - வெண்டல் காதல் மலர்ந்து பத்மா அதற்கு குட்டி சாட்சியாகியிருக்கிறது.

இதனையறிந்த பூங்கா நிர்வாகிகள் மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல.. என்பதுபோல் சிரித்துச் சென்றிருக்கின்றனர்.

-ஏபி

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close