[X] Close

‘‘கொலை செய்யக் கூட குழந்தைகளுக்கு பயிற்சி அளித்திருக்கிறோம்’’ - இந்து மகா சபை சர்ச்சை கருத்து


we-ve-trained-our-kids-to-kill-husband-of-hindu-mahasabha-leader-who-shot-gandhi

  • இந்து குணசேகர்
  • Posted: 01 Feb, 2019 15:33 pm
  • அ+ அ-

நாட்டின் ஒற்றுமைக்கு சவால் விடும் யாரையும் கொலை செய்யக் கூட எங்கள் குழந்தைகளுக்கு பயிற்சி அளித்திருக்கிறோம் என்று காந்தி உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்ட இந்து மகா சபை தலைவர் பூஜாவின் கணவர் தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தி கடந்த 1948-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி நாதுராம் கோட்சோவால் டெல்லியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் காந்தியின் 71-வது நினைவுநாள்  30 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. இந்த சூழலில் அலிகர் நகரில் இந்து மகாசபா அமைப்பைச் சேர்ந்த பூஜா சகுண் பாண்டே என்ற பெண் தலைவர் தலைமையில் சிலர் மகாத்மா காந்தியின் உருவ பொம்மையை வைத்து அதில் , துப்பாக்கி(ஏர்கன்) சுட்டனர்.

அந்த உருவ பொம்மையில் வைக்கப்பட்டிருந்த சிவப்பான திரவம் ரத்தம் போல் வழிந்து ஓடியவுடன், அந்த உருவ பொம்மை மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொளுத்தினார்கள். இதை வீடியோவாக எடுத்து வெளியிட்டனர். சுடும்போது நாதுராம் கோட்சே வாழ்க என்று இந்தியில் முழக்கமிட்டனர்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதையடுத்து இந்து மகா சபை அமைப்பைச் சேர்ந்த 13 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் இந்தச் சம்பவம் குறித்து பூஜா பாண்டேவின் கணவரும் கணித பேராசிரியருமான அஷோக் தனியார் செய்தி நிறுவனத்துக்கு  கூறும்போது, ” நாட்டின் ஒற்றுமைக்கு சவால்விடும் வகையில் யாராவது இருந்தால் அவர்களை கொல்ல எங்கள் குழந்தைகளுக்கு பயிற்சி அளித்துள்ளோம். 

குழந்தைகள் நம்மைபோல் அப்பாவியாக இருக்கமாட்டர்கள். அவர்கள் கொல்லப்படுவதற்கு முன்னர் அவர்கள் பலரை கொல்லுவார்கள். பூஜா தைரியமான பெண்மணி. அவர் இந்து மதத்திற்கு சேவை செய்வதற்காக சாதாரண வாழ்க்கையிலிருந்து விலகி துறவறத்தை தேர்தெடுத்தவர்” என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close