[X] Close

கிறிஸ்தவ - இஸ்லாமிய மத வரலாற்றின் புதிய பக்கத்தை எழுதுவதில் மகிழ்ச்சி: போப் பிரான்சிஸ் நெகிழ்ச்சி


pope-says-happy-to-write-new-page-in-history-with-uae-visit

  • க.சே.ரமணி பிரபா தேவி
  • Posted: 31 Jan, 2019 18:04 pm
  • அ+ அ-

கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் என இரண்டு மதங்களுக்கு இடையிலான தொடர்பு குறித்த வரலாற்றின் புதிய பக்கத்தை எழுதுவது மகிழ்ச்சி அளிப்பதாக போப் ஆண்டவர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று போப் பிரான்சிஸ் ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். இதுதொடர்பாக அந்நாட்டு மக்களுக்கு அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ''நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். மதங்களுக்கிடையிலான உறவின் வரலாற்றில், ஒரு பதிய பக்கத்தில் உங்களின் நேசமிக்க தேசத்தில் எழுதுகிறேன். நாம் வேறுவேறாக இருந்தாலும் சகோதரர்கள்தான்.

இங்கு பிப்ரவரி 3 முதல் 5-ம் தேதி வரை நடைபெறும் மதநல்லிணக்கக் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்த அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் சயத் அல்-நயானுக்கு நன்றி. இங்கு வந்ததன் மூலம் நண்பரும் சகோதரருமான எகிப்து சன்னி முஸ்லிம்களின் தலைவரான சேக் அகமது அல்-தயேப்பை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

வருங்காலத்தை நோக்கி நிகழ்காலத்தில் வாழும் மக்களைச் சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன்'' என்றார் போப் பிரான்சிஸ்.

இந்தச் செய்தி வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் இத்தாலிய மொழியில் பேசுகிறார் போப். அது அரேபிய மொழியில் டப் செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் மக்களில் 80 சதவீதத்தினர் முஸ்லிம்கள். கிறிஸ்தவர்கள் 9 சதவீதம் பேரும் பிற மதத்தினர் 1 சதவீதமும் இருக்கின்றனர்.

இதில் பெரும்பான்மையான கத்தோலிக்கர்கள் ஆப்பிரிக்கா, வங்கதேசம், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆவர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close