[X] Close

அமெரிக்காவில் இந்து கோவில் சேதம்


hindu-temple-vandalised-in-u-s

மாதிரிப் படம்

  • kamadenu
  • Posted: 31 Jan, 2019 16:03 pm
  • அ+ அ-

அமெரிக்காவில் உள்ள  லுயிஸ்வில்லே நகரில் ஸ்வாமி நாரயண் கோவில் மர்ம நபர்கள் சேதப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ”லுயிஸ்வில்லே நகரில் ஸ்வாமி நாரயணன்  கோவிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை  காலை இடைப்பட்ட நேரத்தில்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கோவிலுள்ள படங்களை கருமை நிறத்தைக் கொண்டு மறைத்துள்ளனர். அங்குள்ள கதவுகளையும், ஜன்னல்களையும் தாக்கியுள்ளனர்” என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வெறுப்பு  தாக்குதல் குறித்து விசாரண நடைபெற்று வருவதாக  அமெரிக்க போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கு  லுயிஸ்வில்லா நகர மேயர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கிரெக் பிஷர் கூறும்போது,  ”நாங்கள் எந்த நேரத்திலும் வெறுப்புணர்வுக்கு எதிராகவே இருப்போம். இந்தத் செயலை செய்த கோழைகள் நமக்குள் இருக்கும் ஒற்றுமையை மேலும் அதிகமாகியுள்ளனர்” என்றார்

ஸ்வாமி நாரயண் கோவிலை சேர்ந்த ராஜ் பட்டேல் கூறும்போது, “  நீங்கள் எந்த மதத்தினராக இருந்தாலும் இம்மாதிரியான செயல்கள் நடக்கக் கூடாது” என்று வலியிறுத்தினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close