[X] Close

பாகிஸ்தானில் கொடூரம்: குழந்தைத் தொழிலாளியைக் கொலை செய்த மூன்று பெண்கள் கைது


three-women-sent-to-jail-for-torturing-strangling-16-year-old-maid-in-lahore

  • இந்து குணசேகர்
  • Posted: 31 Jan, 2019 14:52 pm
  • அ+ அ-

பாகிஸ்தானில் தங்களிடம் பணிபுரிந்த சிறுமி ஒருவரைக் கொடூரமான முறையில் கொலை செய்து சாக்கடையில் வீசிய மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் தரப்பில், ''பாகிஸ்தானின் லாகூர் நகரில் வீடு ஒன்றில் பணிப்பெண்ணாகப் பணியாற்றி வந்தார் உஸ்மா பீவி. 16 வயதான உஸ்மா பீவியை கடந்த 2  மாதங்களாக தொடர்புகொள்ள முடியவில்லை என்று அவரது குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து தேடுதலில் இறங்கிய போலீஸார், கடுமையாக தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு கைகள் கட்டப்பட்ட நிலையில் இறந்த உஸ்மா பீவியின் உடலை சாக்கடையிலிருந்து கண்டெடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் உஸ்மா பணிப்பெண்ணாக பணியாற்றி வீட்டின் மூன்று பெண்களைக் (மருக், ஐமா, ரெகானா) கைது செய்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையில் உஸ்மா இவர்களுக்குத் தெரியாமல் உணவை எடுத்து சாப்பிட்ட காரணத்திற்காக அவரை சித்ரவதை செய்து கொன்று பின்னர் அவரது உடலை சாக்கடையில் கட்டி வீசியுள்ளனர். இந்தக் குற்றத்தை அப்பெண்கள் ஒப்புக் கொண்டதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது'' என்று செய்தி வெளியிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண்களுக்கு எதிரான வழக்கு பிப்ரவரி 7-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது என்று பாகிஸ்தான் ஊடங்கள் தெரிவித்துள்ளன. 

இந்த நிலையில் உஸ்மா பீவிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று #JusticeForUzma என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைதளங்களில் பாகிஸ்தான் நெட்டிசன்கள் டிரெண்ட் செய்தனர்.

இந்த வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று பாகிஸ்தான் மனித உரிமைகள் துறை அமைச்சர் ஷிரின் மசாரி தெரிவித்துள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close