[X] Close

எங்கள் நாட்டின் எண்ணெய் வளத்தை அமெரிக்கா கைப்பற்ற நினைக்கிறது: வெனிசுலா அதிபர் குற்றச்சாட்டு


us-push-against-venezuela-s-maduro

  • இந்து குணசேகர்
  • Posted: 31 Jan, 2019 12:37 pm
  • அ+ அ-

எங்கள் நாட்டின் எண்ணெய் வளத்தைக் கைப்பற்ற அமெரிக்கா நினைக்கிறது என்று வெனிசுலா அதிபர்  நிக்கோலஸ் மதுரோ குற்றம் சாட்டியுள்ளார்

இதுகுறித்து  நிக்கோலஸ் மதுரோ வீடியோ ஒன்றில்  கூறும்போது, ''என்னையும் எனது அரசையும் கவிழ்த்து அமெரிக்கா எங்களது நாட்டின் எண்ணெய் வளத்தைக் கைப்பற்ற நினைக்கிறது. எங்களது நாட்டை புதிய வியட்நாமாக மாற்ற அமெரிக்கா நினைக்கிறது. வன்முறையை வெனிசுலா அனுமதிக்காது. வெனிசுலா மக்கள் அமைதியை விரும்புபவர்கள். இதற்கு வியட்நாம் உறுதியாக இருக்க வேண்டும்'' என்றார்.

அமெரிக்காவுடன் சமீபத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக அந்நாடு உடனான அனைத்து உறவுகளும் முறிந்ததாக வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அறிவித்தார்.

தென் அமெரிக்காவில் எண்ணெய் வளம் மிகுந்த நாடுகளில் வெனிசுலாவும் ஒன்று. இங்கு அதிபராக இருந்த ஹக்கோ சாவேஸ் கடந்த 2013-ம் ஆண்டு மரணமடைந்த பின்னர் அதிபராக நிக்கோலஸ் மதுரோ பதவி ஏற்றார். அப்போதே அவரின் மீது விமர்சனங்கள் எழுந்தன.

கடந்த மே மாதம் நடந்த நடந்த தேர்தலிலும் நிக்கோலஸ் மதுரோ வெற்றி பெற்று இரண்டாவது முறையாக அதிபரானார். தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் செய்து மதுரோ வென்றிருப்பதாகவும் சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்தன.

வெனிசுலா கடும் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்றவற்றாலும், அரசியல் நிலையற்ற தன்மையாலும் திண்டாடி வருகிறது. வெனிசுலாவில் மனித உரிமை மீறல்கள், அதிகார துஷ்பிரயோகங்கள், எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் மீதான அடக்குமுறை நடப்பதாக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.

மதுரோவின் ஆட்சிக்கு எதிரான மக்கள் தொடர்ந்து வீதிகளில் போராடி வருகின்றனர்.

மேலும், அண்டை நாடுகளான கொலம்பியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் கம்யூனிஸ்ட் நாடான வெனிசுலாவுக்கு நட்புறவு இல்லை. இதனால், ஒதுக்கப்பட்ட நாடாகவே இருந்து வருகிறது.

தீவிர இடதுசாரி சிந்தனை கொண்டவரான  மதுரோவை இரண்டுமுறை கொல்ல சதி நடந்தது. அதிலிருந்து அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'எல்.கே.ஜி' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close