[X] Close

முதலிடத்தில் டென்மார்க்; ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னேற்றம்


denmark-tops-corruption-free-nations-list

  • kamadenu
  • Posted: 31 Jan, 2019 10:22 am
  • அ+ அ-

ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா சற்று முன்னேறி 78-வது இடத்தை பிடித்துள்ளது.

'வாட்ச்டாக் ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல்' என்ற சர்வதேச நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் ஊழலின் அடிப்படையில் உலகநாடுகள் தலைகீழாக தரவரிசைப்படுத்தப்படுகின்றன.

அந்த வகையில், கடந்த ஆண்டுக்கான ஊழல் தரவரிசைப் பட்டியலை அந்நிறுவனம் அமெரிக்காவில் நேற்று வெளியிட்டது. இதில், டென்மார்க் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் நியூசிலாந்தும், மூன்றாவது இடத்தில் சிங்கப்பூரும் உள்ளன. இதன் மூலம், அந்நாடுகளில் மிக குறைந்த அளவே ஊழல் நடைபெறுவது தெரியவந்துள்ளது.

இந்தப் பட்டியலில் இந்தியா 78-வது இடத்தை பிடித்திருக்கிறது. கடந்த முறை, 81-வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 3 இடங்கள் முன்னேறியுள்ளது. இதன் மூலமாக, இந்தியாவில் ஊழல் ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருப்பது தெரியவருகிறது.

அதேபோல், இப்பட்டியலில் சீனா 87-வது இடத்தையும், பாகிஸ்தான் 117-வது இடத்தையும் பிடித்திருக்கின்றன. இலங்கை 89-வது இடத்திலும், வங்கதேசம் 149-வது இடத்திலும் இருக்கின்றன.

அமெரிக்காவுக்கு பட்டியலில் 22-வது இடம் கிடைத்துள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close