[X] Close

'ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும்' - மாணவர்களுக்கு உத்தரவிட்ட அமெரிக்க பல்கலை. பேராசிரியர் நீக்கம்


professor

  • kamadenu
  • Posted: 29 Jan, 2019 12:30 pm
  • அ+ அ-

'சீன மொழியில் பேசக்கூடாது, ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும்' என்று மாணவர்களுக்கு மெயில் அனுப்பிய அமெரிக்க பல்கலைக்கழகப் பேராசிரியர், இளங்கலைக் கல்வித்திட்ட இயக்குநர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ளது ட்யூக் பல்கலைக்கழகம். அங்கு உதவிப் பேராசிரியராகப் பணிபுரிபவர் மேகன் நீலி. அவரிடம் உயிரிபுள்ளியியல் துறை மாணவர்கள் சிலர் கல்லூரியின் பொது இடங்களில் சீன மொழியில் பேசுவதாக, இரு ஆசிரியர்கள் புகார் அளித்தனர்.

இதனால் மேகன், அந்த மாணவர்களிடம் ''சீன மொழியில் பேசாதீர்கள்; ஆங்கிலத்தில் பேசாமல் இருப்பது தேவையில்லாத விளைவுகளை ஏற்படுத்தும்'' என்று எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அவர், மாணவர்களுக்கு அனுப்பிய மெயில் ஸ்க்ரீன்ஷாட் வைரலானது.

இதை விசாரித்த ட்யூக் பல்கலைக்கழகம் இளங்கலைக் கல்வித்திட்ட இயக்குநர் பதவியில் இருந்து மேகனை நீக்கி உத்தரவிட்டது.

மேகன் நீலி விளக்கம்

ஆனால் இதை மறுத்துள்ள பேராசிரியர் மேகன் நீலி , ''ஆசிரியர்கள் இருவரும் சீன மொழி பேசும் மாணவர்கள் இருக்கிறார்களா என்று கேட்டனர். அவர்களின் பெயர் வேண்டும் எனவும் பயிற்சிக்காக அவர்களைப் பயன்படுத்திக் கொள்வதாகவும் கேட்டனர். அதனால்தான் அவ்வாறு கூறினேன்.

அப்போது வேலைவாய்ப்புக்காக நீங்கள் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும். இல்லையெனில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும் என்று கூறினேன்'' எனத் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close