[X] Close

நான் இந்து ... அவர்கள் இல்லை: அமெரிக்க அதிபர் வேட்பாளர் துளசி பதில்


tulasi

  • kamadenu
  • Posted: 29 Jan, 2019 12:28 pm
  • அ+ அ-

அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான ஓட்டத்தில் இந்து - அமெரிக்கரான நானும் இருப்பதில் பெருமை கொள்கிறேன் என்று ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த துளசி கம்பர்ட் தன் மீதான விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ளார்.

அமெரிக்காவில் அடுத்த வருடம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த  நிலையில் அமெரிக்காவின் பிரதான கட்சிகளான ஜனநாயகக் கட்சியும், குடியரசுக் கட்சியும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. குடியரசுக் கட்சி சார்பில் ட்ரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபர் போட்டியில் நிற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் ஜனநாயக் கட்சியால் அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் அறிவிக்கப்பட்ட  வேட்பாளர்கள் போட்டி போட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்  ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர்களில் ஒருவராக அறிவிக்கப்பட்டுள்ள துளசி கம்பார்ட் (ஹவாய் மாகாணத்திலிருந்து நான்கு முறை ஜனநாயகக் கட்சி சார்பில்  நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்)  தான் மத வெறுப்புணர்வால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் தொடர்ந்து அவரையும் அவரது ஆதரவாளர்களையும் மதத்தைக் கொண்டு எந்தக் காரணமும் இல்லாமல் விமர்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ''நான் இந்திய மக்களால் ஜனநாயக முறையில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியப் பிரதமர் மோடியைத்தான் சந்தித்தேன். ஆனால், ஏனோ நான் தொடர்ந்து சந்தேகத்துக்குரிய முறையில் விமர்சனதுக்கு உள்ளாகி இருக்கிறேன்.

முன்னாள் அதிபர் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன், தற்போதைய அதிபர் ட்ரம்ப்பும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் மோடியைச் சந்தித்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான  ஒட்டத்தில் இந்து - அமெரிக்கரான நான் இருப்பதில் பெருமை கொள்கிறேன். என்னை மட்டுமல்லாது எனது ஆதரவாளர்களையும் மதத்தினால் விமர்சிக்கிறார்கள். ஆசிய  நாடுகளில் இந்தியாதான் அமெரிக்காவுடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ளது.

நாட்டிற்காக நான் செய்த பணியைக் கேள்வி கேட்பவர்கள் பிற மதத் தலைவர்களைக் கேள்வி கேட்பதில்லை. இந்த இரண்டு விதமான நிலைப்பாடு ஒன்றை மட்டும்தான்  கூறுகிறது அது மத வெறுப்புணர்வு. நான் இந்து. அவர்கள் இந்துக்கள் அல்ல என்பதுதான்'' என்றார் துளசி.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close