[X] Close

சமூக வலைதளங்களில்வைரலான சீன தலைமை ஆசிரியர்


school-principal-shuffles-as-he-leads-students-in-dance-routine

  • இந்து குணசேகர்
  • Posted: 28 Jan, 2019 15:46 pm
  • அ+ அ-

சீனாவில் பள்ளிக் கூட தலைமை ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு நடனம் கற்பிக்கும் வீடியோ ஒன்று கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. 

சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ள லின்யி மாகாணத்தில் உள்ளது ஸி குவான் தொடக்க பள்ளி.  இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சாங் பெங்ஃபி (40) ஒவ்வொரு  நாளும் தனது பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு உற்சாகமளிப்பதற்காக தினமும் நடனம் கற்பிக்கிறார்.

கால்களை  இலகுவாக நகர்த்தி, சுறுப்சுறுப்பாக அவர் ஆடும் நடனம் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. சாங்கை பின் தொடர்ந்து மாணவர்களும், ஆசிரியர்களும் ஆடுகின்றனர். 

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தலையாசிரியர் வாங்குக்கும் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். வாங்கை பின்பற்றி சீனாவின் பிற பள்ளிகளிலும் இதனை பின்பற்ற இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close