[X] Close

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளிப் பெண்


america-election

  • kamadenu
  • Posted: 22 Jan, 2019 19:49 pm
  • அ+ அ-

அமெரிக்காவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள அமெரிக்கத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் ஜனநாயக் கட்சி சார்பாகப் போட்டியிட உள்ளார்.

2020-ம் ஆண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் ட்ரம்ப்பின் அரசை தொடர்ச்சியாக விமர்சித்து வரும் கமலா ஹாரீஸ் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான வீடியோ ஒன்றை கமலா ஹாரீஸ் வெளியிட்டுள்ளார். அதில், ''அமெரிக்காவின்  எதிர்காலம், லட்சக்கணக்கான மக்கள் அவர்களது குரலை நமது உரிமைகளுக்கான உயர்த்திப் பிடிப்பதில் உள்ளது. எனவேதான் நான் அமெரிக்க அதிபருக்கான போட்டியில் இருக்கிறேன்'' என்று கமலா ஹாரீஸ் கூறியுள்ளார்.

மேலும் அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸுக்குப் போட்டியாக குடியரசுக் கட்சி சார்பில் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

யார் இந்த கமலா ஹாரிஸ்?

கலிபோர்னியா மாகாண அட்டர்னி ஜெனரலாக இருந்த கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சி சார்பில் கலிபோர்னியா செனட் உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

இந்த வரலாற்று வெற்றியின் மூலம் அமெரிக்க செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் இந்திய வம்சாவளிப் பெண் என்ற பெருமையை கமலா ஹாரிஸுக்குக் கிடைத்தது.

கமலா ஹாரிஸின் தாயார் சியாமளா கோபாலன் சென்னையில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர் ஆவார். தந்தை ஜமைக்காவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close