[X] Close

உலகின் வயதான ஆண் காலமானார்


world-s-oldest-man-dies-in-japan-at-age-112

  • இந்து குணசேகர்
  • Posted: 21 Jan, 2019 11:53 am
  • அ+ அ-

உலகிலேயே வயதான ஆண் என்று கடந்த ஏப்ரல் 2018 கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த ஜப்பானைச் சேர்ந்த மசாசோ நோனாகோ மரணம் அடைந்தார்.

இதுகுறித்து ஜப்பான் ஊடகங்கள், ”ஜப்பானை சேர்ந்த  மசாசோ நோனாகோ ஜூலை 25 ஆம் தேதி, 1905 ஆம் ஆண்டு ஜப்பானின் தீவுப்பகுதியான ஹோக்கைடோவில் பிறந்தார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உலகின் வயதான ஆண் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார். அவருக்கு  வயது 112.இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை மசாசோ அவரது இல்லத்தில் மரணம் அடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மருத்துவர்களும் அவரது இறப்பை உறுதிப்படுத்தி உள்ளனர். மசாசோ சனிக்கிழமைவரை உடல் நலத்துடனும் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தினர்” என்று கூறியுள்ளது.

உலகின் வயதான நபரான ஆண்ணாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த மசாசோ  112  ஆண்டுகள் மற்றும் 259 நாள் வாழ்ந்திருக்கிறார். தன்னுடய ஓய்வு காலங்களில் செய்தித்தாள் படிப்பது, இனிப்பு, சாக்லெட்டுகளை விரும்பி சாப்பிடுவதை அவர் பழக்கமாக கொண்டிருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

உலகின் வயதான ஆண்ணாக முன்னர் கருத்தப்பட்ட ஜப்பான்னின் ஜிரோமோன் கடந்த 2013 ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். மரணம் அடைந்தபோது அவருக்கு வயது 116.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close