[X] Close
 

35 ஆண்டுகளுக்குப் பிறகு சினிமா தியேட்டர்; காத்திருக்கும் மக்கள்.. எங்கு தெரியுமா?


saudi-arabia-to-open-first-new-cinema-in-35-years

படம்: கெட்டி இமேஜஸ்

  • பாரதி
  • Posted: 05 Apr, 2018 12:32 pm
  • அ+ அ-

சவுதி அரேபியாவில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சினிமா தியேட்டர்கள் திறக்கப்படவுள்ளன. வரும் 18-ம் தேதி ரியாத்தில் இந்தத் திரையரங்கு தொடங்கப்படுகிறது. ஏஎம்சி என்டர்டெயின்மென்ட் ஹோல்டிங்க்ஸ் சார்பில் இத்திரையரங்கு திறக்கப்படுகிறது.

அடுத்த 5 ஆண்டுகளில் 40 தியேட்டர்கள் தொடங்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
முஸ்லிம் பழமைவாத நாடாக அறியப்பட்ட சவுதி அரேபியாவில், அண்மைக்காலமாக சில கெடுபிடிகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி, பெண்கள் விளையாட்டுப் போட்டிகளை மைதானத்தில் கண்டுகழிக்க அனுமதி போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வரிசையில், தற்போது 35 ஆண்டுகளுக்குப் பிறகு சினிமா தியேட்டர் திறக்கப்படுகிறது. இந்தத் திரையரங்குகளில் பெண்களுக்கும் அனுமதி உண்டு. முதல் படமாக மார்வெலின் 'பிளாக் பாந்தர்' திரையிடப்படுகிறது. 

1970-ல் சவுதி அரேபியாவில் சில சினிமா தியேட்டர்கள் இயங்கின. ஆனால், மதகுருமார்கள் அவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்தமையால் அவை மூடப்பட்டன. இந்நிலையில், சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஆட்சியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட வரும் சமூக பொருளாதார சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, கடந்த 2017-ல் சில சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.

அதன்படி திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏஎம்சியின் முதல் திரையரங்கானது மன்னர் அப்துல்லாவின் கட்டிடத்தில் அமைக்கப்படுகிறது. பிரதான திரையரங்கில் 500 சீட்கள் அமைக்கப்படுகிறது. கோடைகாலம் முடிவதற்குள் மேலும் மூன்று திரைகள் அதே வளாகத்தில் அமைக்கப்படவுள்ளது.

சவுதியில் சினிமா தியேட்டர்கள் இல்லை என்றாலும், சவுதி மக்கள் ஹாலிவுட் படங்களைப் பார்ப்பதிலும் தொலைக்காட்சி சீரியல்கள் பார்பதிலும் ஆர்வமிக்கவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close