[X] Close

பத்து ஆண்டு சேலஞ்ச்: பழைய படத்தைப் பகிர்ந்து மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ஒபாமா


over-5-million-likes-for-sweet-throwback-pic-of-barack-and-michelle-obama

  • பாரதி ஆனந்த்
  • Posted: 19 Jan, 2019 12:28 pm
  • அ+ அ-

பத்து ஆண்டு சேலஞ்ச் என்ற இணையவெளி சவாலில் தனது பழைய புகைப்படத்தைப் பகிர்ந்து தனது மனைவிக்கு காதலை சொல்லியிருக்கிறார் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா.

இணையவெளியில் சமீபத்திய ட்ரெண்ட் #10YearChallenge என்ற சவால்தான். 10 ஆண்டுகளுக்கு முந்தைய புகைப்படத்தையும் தற்போதைய புகைப்படத்தையும் பகிர்ந்து இணையவாசிகள் குதூகலித்து வருகின்றனர்.

 

— Barack Obama (@BarackObama) January 17, 2019

 

அந்த வரிசையில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா தனது மனைவியுடன் எடுத்த பழைய புகைப்படத்தைப் பகிர்ந்து, "எனக்கு அன்றும் தெரியும் இன்றும் அதை சொல்வேன் உன்னைப் போல் ஒருவள் யாருமில்லை என்று.. பிறந்தநாள் வாழ்த்துகள் மிச்செல்ஒபாமா" என ட்வீட் செய்திருக்கிறார்.

அந்தக் காதல் மொழிக்கு பதில் சொல்லிய மிச்செல் ஒபாமா, "பிறந்தநாளன்று சொன்ன காதலுக்கு நன்றி. நானும் உங்களை நேசிக்கிறேன். எனது தெற்கத்தி வேர்களுக்கும், வாழ்க்கையை இனிதாக்கும் துணைவருக்கும், எனது மகள்களுக்கும், கடந்த 55 ஆண்டுகளில் ஏற்பட்ட ஒவ்வொரு எதிர்பாரா திருப்புமுனைகளுக்கும் நன்றி சொல்கிறேன். அடுத்த என்ன நடக்கும் என்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close