[X] Close
 

வீடியோக்களுக்கு பணம் தராததால் துப்பாக்கிச் சூடு: யூடியூப் தாக்குதல் குறித்து புதிய தகவல்கள்


what-we-know-about-the-youtube-shooter-nasim-aghdam

  • பாரதி
  • Posted: 04 Apr, 2018 14:14 pm
  • அ+ அ-

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் யூடியூப் சேனல் ஊழியர்கள் மீது துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது நசீம் அக்தாம் என்ற 39 வயது பெண் எனத் தெரியவந்துள்ளது.

அவரைப் பற்றிய இன்னும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

1. பெயர்- நசீம் அக்தாம்

2. வயது- 39

3. வசித்த இடம்- சான் டியாகோ

4. ஏற்கெனவே அறியப்பட்டவர் - கடந்த 2009-ல் சான் டியாகோ நகரில் பீட்டா அமைப்பினர் பன்றிகளை ராணுவத்தில் பயிற்சிக்காக பயன்படுத்துவதை எதிர்த்து நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் அளித்த பேட்டியில், "மனித உரிமைகளுக்கு நிகராக விலங்குகள் உரிமையும் எனக்கு முக்கியம்" என்றார்.

5. அவருடைய இணையதளம்  NasimeSabz.com. இதில் பாரசீக கலாச்சாரம், சைவ உணவு உள்ளிட்டவை தொடர்பான பதிவுகள் அதிகம் இடம்பெற்றிருந்தன. அதேபோல், யூடியூப் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் விளம்பரப் பணத்தை சுரண்டுவதாகவும் பதிவுகள் இடம் பெற்றிருந்தன.

6. செவ்வாய்க்கிழமை (நேற்று) மாலை நசீம் தனது யூடியூப் கணக்கை செயலிழக்கச் செய்தார்.

பணம் தராததால் ஆவேசம்

நசீம் குறித்து அவரது தந்தை இஸ்மாயில் அக்தாம் கூறும்போது, "நசீம் தனது யூடியூப் வீடியோக்களுக்கு அந்நிறுவனம் பணம் தருவதை நிறுத்தியதால் ஆவேசத்தில் இருந்தார். அவர் வீட்டைவிட்டு வெளியேறி இரு தினங்கள் ஆனதால், நான் இது குறித்து காவல்துறையிலும் புகார் தெரிவித்திருந்தேன்" எனக் கூறினார்.
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close