[X] Close

அமெரிக்காவில் யூடியூப் தலைமையகத்தில் துப்பாக்கிச் சூடு


woman-suspect-dead-several-injured-in-youtube-headquarters-shooting

படம்: ஏஎஃப்பி

  • பாரதி ஆனந்த்
  • Posted: 04 Apr, 2018 09:09 am
  • அ+ அ-

அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தில் உள்ள யூடியூப் தலைமையகத்தில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் 4 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கருதப்படும் பெண் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில், "சான் பிரான்சிஸ்கோவில் உள்ள யூடியூப் தலைமையகத்தில் துப்பக்கிச் சூடு நடைபெற்றது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக நாங்கள் சந்தேகிக்கும் பெண் தற்கொலை செய்து கொண்டார். அவர் யார் என்பதை இன்னும் நாங்கள் உறுதிப்படுத்தவில்லை. இச்சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர்.
இது தீவிரவாத தாக்குதலா என்பதை இப்போதே உறுதிப்படுத்த முடியாது, அலுவலகத்தின் பின்புற வாசல் வழியாக அந்தப் பெண் உள்ளே நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறார். மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து யூடியூப் பிராடக்ட் மேனேஜர் டோட் ஷெர்மேன் கூறும்போது, "ஊழியர்கள் அலறிக்கொண்டு அங்குமிங்கும் ஓடுவதைக் கண்டு முதலில் நான் ஏதோ நிலநடுக்கம் ஏற்பட்டுவிட்டதோ என்றே கருதினேன். அப்புறம்தான் தெரிந்துகொண்டேன் துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது. அப்போது அங்கு யாரைப் பார்த்தாலும் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தற்கொலை செய்துகொண்ட தகவல் கிடைத்ததும் நாங்கள் அனைவரும் முன்வாசல் வழியாக வெளியேறினோம்" என்றார்.
அண்மையில் புளோரிடா மாகாணத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 17 பேர் கொல்லப்பட்டனர் என்பது கவனிக்கத்தக்கது.

சுந்தர் பிட்சை ஆறுதல்:
சம்பவம் குறித்து உடனடியாக கருத்து தெரிவிக்க யூடியூப் தலைமைச் செயலர் சூசன் வோஜிக்கி மறுத்துவிட்டார். இதற்கிடையில் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிட்சை, ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "எனக்குக் கிடைத்த கடைசித் தகவலின்படி இந்த கொடூர சம்பவத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர். நீங்கள் அனைவரும் தற்போது அதிர்ச்சியில் இருப்பீர்கள். வரும் நாட்களில் உங்கள் அனைவருக்கும் உரிய ஆறுதலையும் ஆதரவையும் கூகுள் குடும்பம் வழங்கும். இந்த எதிர்பாராத துயரத்திலிருந்து உங்களை மீட்க கூகுள் குடும்பம் உதவும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close