[X] Close

மாதவிலக்கு நேரத்தில் தனிகுடிசையில் தங்க வைக்கப்பட்ட தாய், 2 குழந்தைகள் பலி: நேபாளத்தில் துயரம்


nepal-woman-sons-suffocate-to-death-in-banned-menstrual-hut

  • போத்திராஜ்
  • Posted: 12 Jan, 2019 10:03 am
  • அ+ அ-

 

காத்மாண்டு,

மாதவிலக்கு நேரத்தில் தீட்டு எனக் கூறி தனக் குடிசையில் தங்கவைக்கப்பட்ட பெண், அவரின் இரு குழந்தைகள் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

நேபாளத்தில் மாதவிலக்கு நேரத்தில் பெண்களை தனிக்குடிசையில் தங்கவைக்கும் வழக்கம் 2017-ம் ஆண்டு முதல் தடை செய்யப்பட்டு, கிரிமினல் குற்றமாக்கப்பட்டுள்ள நிலையிலும் பல்வேறு கிராமங்களில் இந்த வழக்கம் இன்னும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்து நாடான நேபாளத்தில் பெண்கள் மாதவிலக்கு நேரத்தில் வீட்டுக்குள் செல்ல அனுமதி கிடையாது. சவுபாதி என்று அழைக்கப்படும் இந்த வழக்கத்தின்படி, வீட்டுக்கு வெளியே இருக்கும் சிறிய குடிசையில் 3 நாட்களும் மாதவிலக்கு நேரத்தில் பெண் தங்கி இருந்து தங்களுக்கு வேண்டிய உணவுகளைச் சமைத்துக்கொள்ள வேண்டும். யாரையும் தொடக்கூடாது, புத்தகங்கள் உள்ளிட்ட எந்தப் பொருட்களையும் தொடுவதற்கு அனுமதியில்லை. இந்த வினோத வழக்கம் தடைசெய்யப்பட்ட சூழலிலும் இது தொடர்ந்து நடந்து வருகிறது.

நேபாளத்தின் மேற்குப் பகுதியில், பஜுரா மாவட்டத்தில் உள்ள பாட் எனும் கிராமத்தைச் சேர்ந்த அம்பா போரா(வயது35) மாதவிலக்கு நேரத்தில் குடிசையில் தங்கி இருந்தார். அப்போது அவரின் இரு குழந்தைகளும் அவருடன் தங்கியுள்ளனர். தற்போது இமயமலைப்பகுதியில் கடும் குளிர் நிலவுவதால், குடிசைக்குள் தீமூட்டி குளிர்காய்ந்துள்ளனர்.

குடிசையில் இருந்து புகை வெளியே செல்ல இடைவெளி இல்லாத நிலையில், மூச்சுத்திணறி தாய், இரு குழந்தைகள் உயிரிழந்தனர். இவர்கள் மூவரும் சடலமாக நேற்று அதிகாலை மீட்கப்பட்டனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரி உத்தப்சிங் கூறுகையில், “ அம்பா போரா, அவரின் இரு குழந்தைகளும் மூச்சுத்திணறி இறந்துள்ளனர் என்று சந்தேகப்படுகிறோம். சவுபாதி பழக்கத்தை அரசு தடை செய்தபின்னரும் இது தொடர்ந்து வருகிறது” எனத் தெரிவித்தார்.

இது குறித்து பஜுராமாவட்ட நிர்வாகத் தலைவர் சேத்ராஜ் பாரல் கூறுகையில், “ சவுபாதி பழக்கத்தை ஒழிக்க அரசு சட்டமியற்றியபின் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். மாவட்டத்தில் இருந்து முற்றிலும் ஒழிக்கப்பட்ட நிலையில்,இதுபோன்ற சம்பவம் நட்துள்ளது, அந்தக் குடிசைகளும் ஒழிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையிலும் நடந்துள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம் “ எனத் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close