[X] Close

பாகிஸ்தானில் நான்கு கிறிஸ்துவர்கள் சுட்டுக் கொலை: தொடரும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்


pakistan-minorities-attack-pakistan-christians-christians-killed

குவெட்டா நகரில் ஈஸ்டர் பிரார்த்தனை நடக்கும் சர்ச்சுக்கு வெளியே காவலுக்கு நிற்கும் பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரி | கோப்புப் படம்: ஏ.எஃப்.பி

  • kamadenu
  • Posted: 03 Apr, 2018 13:33 pm
  • அ+ அ-

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் கிறிஸ்துவ குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என போலீஸ் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட குடும்பம் திங்கட்கிழமை இரவு காரில் வந்துகொண்டிருந்தனர்.  அப்போது ஆயுதம் ஏந்திய, அடையாளம் தெரியாத சிலர் அந்த வாகனத்தை வழி மறித்து சுட்டனர் என குவெட்டா போலீஸ் செய்தித் தொடர்பாளர் முகமது ரம்ஸான் கூறினார். 

ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் கொண்டாட்டத்தைத் தொடர்ந்து திங்களன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. பாகிஸ்தான் ஜனத்தொகையில் வெறும் 2 சதவீதமே இருக்கும் கிறிஸ்துவர்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த டிசம்பர் 2017ல், கிறிஸ்துமஸுக்கு ஒரு வாரத்துக்கு முன்பு குவெட்டாவில் தீவிரவாத தாக்குதல் நடந்தது. சர்ச்சுக்குள் இரண்டு தீவிரவாதிகள் உடம்பில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு நுழைந்தனர். இந்த தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். 44 பேர் காயமடைந்தனர். இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.

அதற்கு முன்பு, மார்ச் 2016ல், லாகூர் பூங்கா ஒன்றில் ஈஸ்டர் கொண்டாடிக்கொண்டிருந்த கிறிஸ்துவர்கள் கூட்டத்தை தலிபான் தீவிரவாதிகள் தாக்கினர். இதில் 71 பேர் கொல்லப்பட்டனர். 

- ஐஏஎன்எஸ்

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close