[X] Close
 

வாழ்க்கைத் துணையின் செல்ஃபோனை வேவுபார்த்தால் சிறை: சவுதி அரேபியா


saudi-criminalises-spying-on-spouses-phone

  • பாரதி
  • Posted: 03 Apr, 2018 11:42 am
  • அ+ அ-

வாழ்க்கைத் துணையின் மொபைல் போனை ரகசியமாக நோட்டம்விடுவது வேவுபார்ப்பது கிரிமினல் குற்றம்; இக் குற்றச்சாட்டு உறுதியானால் கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ ஓராண்டு சிறைத் தண்டனை என சவுதி அரேபிய அரசு அதிரடியாக ஒரு சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. சவுதி அரேபியாவின் தகவல் அமைச்சகம் இந்தச் சட்டத்தை வகுத்துள்ளது.

இச்சட்டத்தி கீழ் தண்டனை பெறுபவர் இந்திய மதிப்பின்படி ரூ.83 லட்சம் அபராதமும் கட்ட வேண்டியிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏன் இந்த திடீர் உத்தரவு?
பிளாக்மெயில், (அவதூறு வழக்குகள், சைபர் குற்றங்கள் அதிகரித்துவருவதால் இந்தச் சட்டத்தை கொண்டுவருவதாக தகவல் அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. பழமைவாதம் மிகுந்த நாடு என அறியப்பட்டுள்ள சவுதியில்தான் செல்போன் செயலிகளையும் மொபைல் போன்களையும் உபயோகிப்பவர் எண்ணிக்கையும் மிக அதிகமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சவுதி மக்கள்தொகையில் பாதிக்கும் அதிகமானோர் 25 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள். இவர்கள் பெருவாரியான நேரத்தை மொபைல் இயங்குதளங்களில் செலவிடுகின்றனர் என ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.
 

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close