[X] Close

நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3%- உலக வங்கி கணிப்பு


world-bank

  • kamadenu
  • Posted: 10 Jan, 2019 09:55 am
  • அ+ அ-

நடப்பு நிதி ஆண்டில் (2018-19)இந்தியப் பொருளாதார வளர்ச்சி7.3 சதவீத அளவுக்கு உயரும்என்று உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. அதேசமயம் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் நுகர்வு மற்றும் முதலீட்டின் அடிப்படையில் வளர்ச்சி விகிதத்தை கணித்துள்ளது. உலகிலேயே அதிக வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. சீனாவின் பொருளாதாரம் 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் 6.2 சதவீதமாகவும், 2021-ம் ஆண்டில் 6 சதவீதமாகவும் இருக்கும் என கணித்துள்ளது. 2018-ம் ஆண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ளது. முன்னர் இது 7.3சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

2017-ம் ஆண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாக இருந்தது. அப்போது இந்தியாவின் வளர்ச்சி 6.7 சதவீதமாக இருந்தது. இந்தியாவில் பண மதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளால் பொருளாதார வளர்ச்சி குறைவாக இருந்தது என்றும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியாவில் தற்போது நுகர்வு அதிகரித்துள்ளதோடு முதலீடும் அதிகரித்துள்ளது. இதனால் நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. இது 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் 7.5 சதவீத அளவுக்கு உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018-19-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7.3 சதவீத அளவுக்கு உள்ளது என்றும் இது உள்நாட்டு தேவை அதிகரிப்பு காரணமாக 7.5 சதவீதத்தை எட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு குறைக்கப்பட்டது, கடன்வழங்கும் விகிதம் அதிகரித்தது உள்ளிட்ட நடவடிக்கைகளால் வளர்ச்சி சாத்தியமாகும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி எடுத்துவரும் நடவடிக்கைகளால் உணவுப் பொருள்களின் விலை கட்டுக்குள் உள்ளது. ஜிஎஸ்டி அமலாக்கத்தால் முறைசாரா தொழில்கள் முறைசார்ந்த வரம்புக்குள் வரும். இதனால் வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் உலக வங்கி அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close