[X] Close

ஆப்பிள் சிஇஓ டிம் குக் சம்பளம் 22% உயர்வு


apple-ceo

  • kamadenu
  • Posted: 10 Jan, 2019 09:52 am
  • அ+ அ-

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக்-கின் சம்பளம் 22% உயர்ந்துள்ளது. 2018-ம்ஆண்டில் அவருக்கு அளிக்கப்பட்ட சம்பளம் ஒரு கோடியே 57 லட்சம் டாலராகும். இத்தகவல் பங்குச் சந்தைக்கு அனுப்பிய அறிக்கையில் தெரியவந்துள்ளது.

இதில் அவரது சம்பளம் 30 லட்சம் டாலராகும். ஒரு கோடியே இருபது லட்சம் போனஸாகவும் 6.80 லட்சம் இதர இனங்களில் வழங்கப்பட்ட தொகை எனவும் அதில் அவரது பயண செலவு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடு செலவுகளும் அடங்கும்.

ஆப்பிள் நிறுவனத்தின் செயல்பாடு திருப்திகரமாக இருந்ததால் சிஇஓ சம்பள உயர்வு, போனஸ் ஆகியவை வழங்கப்பட்டது சரியானதேஎன்று நிறுவன குழு தெரிவித்துள்ளது. 2018-ம் ஆண்டில் நிறுவனத்தின் விற்பனை வருமானம் 26,500 கோடி டாலராகும். செயல்பாட்டு லாபம் 7,009 கோடி டாலராகும். 16 சதவீத வளர்ச்சிஆண்டுக்காண்டு 16 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. 2018-ம்ஆண்டில் அதிகபட்ச நிதிநிலையை நிறுவனம் எட்டியதாக பங்குச் சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

58 வயதாகும் டிம் குக் நிறுவனத்துக்கு பெருமை சேர்த்த ஸ்டீவ் ஜாப்ஸை தொடர்ந்து இப்பதவிக்கு வந்தவராவார். 2016-ம் ஆண்டு 87 லட்சம் டாலரும் 2017-ம்ஆண்டு 1 கோடியே 28 லட்சம் டாலரும் இவருக்கு சம்பளம், போனஸாக வழங்கப்பட்டது.

இந்த அறிவிப்பு வெளியான பிறகு ஆப்பிள் நிறுவன பங்குகள் 10 சதவீத அளவுக்கு சரிந்தன.

2013-ம் ஆண்டுக்குப் பிறகு இந்த அளவுக்கு நிறுவனப் பங்குகள் சரிந்தது இதுவே முதல் முறையாகும்.

மிக அதிக அளவிலான பங்குமூலதனம் கொண்ட நிறுவனங்களான அமேசான், மைக்ரோசாப்ட், கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் ஆகியவற்றுக்குஅடுத்ததாக நான்காம் இடத்தில் ஆப்பிள் நிறுவனம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close