[X] Close

ஆஸ்திரேலியாவில் வரலாற்று வெற்றி: கோலிக்கு இம்ரான் கான் பாராட்டு


historical-victory-in-australia-imran-khan-s-praise-for-kohli

கோப்புப் படம்: இம்ரான்கான்

  • kamadenu
  • Posted: 09 Jan, 2019 12:22 pm
  • அ+ அ-

ஆஸ்திரேலியாவில் வரலாற்று வெற்றி பெற்ற இந்திய அணிக்கும் கேப்டன் விராட் கோலிக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று இந்திய அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பையைக் கைப்பற்றியது.இதன் மூலம் கடந்த 72 ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று புதிய சாதனையைப் படைத்தது இந்திய அணி.

இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உட்பட  பல  நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களும் கோலிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலிக்கு முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட்  வீரரும், பாகிஸ்தான் பிரதமருமான இம்ரான் கான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இம்ரான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில், ''விராட் கோலிக்கு இந்திய அணிக்கு  வாழ்த்துகள். துணைக் கண்டத்திலிருந்து ஒரு கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் வெற்றி பெற்றுள்ளது'' என்று பதிவிட்டுள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close