[X] Close
 

சாக்லெட் உற்பத்தி சுற்றுச்சூழலை பாதிக்கலாம்: ஆராய்ச்சியில் அதிர்ச்சித் தகவல்


கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 02 Apr, 2018 15:15 pm
  • அ+ அ-

அடுத்த முறை உங்களுக்கு பிடித்தமான சாக்லெட்டை சுவைக்கும்போது, ஒருவகையில் அது சுற்றுச்சூழலையும் பாதிக்கலாம் என்பதை மனதில் கொள்ளுங்கள். இதுதான் லண்டனில் வெளியான ஒரு ஆராய்ச்சி கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள அதிர்ச்சிகரமான தகவல். 

ஃபுட் ரிஸர்ச் இண்டர்நேஷனல் என்ற பத்திரிகையில் சாக்லெட்டுகளின் கார்பன் அடிச்சுவடு மற்றும் அதன் இதர சுற்றுச்சூழல் தாக்கங்கள் குறித்த ஆராய்ச்சி கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. சாக்லெட்டின் மூலப்பொருட்கள், உற்பத்தி முறை, பேக்கேஜ் செய்யப்படும் முறை மற்றும் கழிவு ஆகியவற்றின் தாக்கத்தை மான்செஸ்டர் பல்கலையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அளவிட்டனர். 

பிரிட்டைன் சாக்லெட் துறை வருடத்துக்கு 2.1 மில்லியன் டன் பைங்குடில் வாயுவை வெளியேற்றுவதாக இந்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இது ஒட்டுமொத்த பெல்ஃபாஸ்ட் நகரம் ஒரு வருடத்துக்கு வெளியேற்றும் வாயுவின் அளவுக்கு சமமாகும்.

மேலும், ஒரு சாக்லெட் பாரை உற்பத்தி செய்ய 1,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது என்பதும் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. சராசரியாக ஒவ்வொரு தனிநபரும் ஒரு வருடத்தில், 8 கிலோ சாக்லெட் வரை சாப்பிடுகிறார்கள்.

சாக்லெட் உற்பத்திக்கு பயன்படும் மூலப் பொருட்களும், சாக்லெட்டின் பாக்கேஜிங் முறையுமே சுற்றுச்சூழல் பாதிப்படைய முக்கிய காரணிகளாக இருக்கின்றன. பால் பவுடர், கோகோ , சர்க்கரை மற்றும் பாமாயில் ஆகியவை மோசமான தரத்தில் இருப்பதும் இதற்குக் காரணம். பால் கலந்த சாக்லெட்டுகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் பால்பவுடர் தீவிரமான தன்மை கொண்டது. 

ஒவ்வொரு வருடமும், சர்வதேச அளவில், 101 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சாக்லெட் விற்பனை மூலம் சம்பாதிக்கப்படுகிறது. பால் மாடுகளும் ஒவ்வொரு லிட்டர் பாலுக்கும் கணிசமான அளவு பைங்குடில் வாயுவை வெளியேற்றுகிறது. இந்த எல்லா காரணிகளும் சேர்ந்துதான் சாக்லெட்டின் சுற்றுச்சூழல் பாதிப்பை தீர்மானிக்கின்றன. 

இனியாவது சுற்றுச்சுழலை மனதில் வைத்து சாக்லெட் உற்பத்தியாளர்கள் செயல்படுவார்கள் என நம்புவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

-பிடிஐ

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close