[X] Close
 

சீனாவின் 'சொர்க்கத்தின் அரண்மனை' விண்கலம் கடலில் விழுந்தது


china-s-tiangong-1-space-station-burns-up-over-south-pacific

  • போத்திராஜ்
  • Posted: 02 Apr, 2018 12:29 pm
  • அ+ அ-

 

சீனாவின் ‘சொர்க்கத்தின் அரண்மனை’ என்று அழைக்கப்படும்  டியான்காங்-1 விண்வெளி நிலையம், இன்று பசிபிக் கடலில் விழுந்து நொறுங்கியது

வானில் இருந்து கீழே விழும்போதே விண்கலத்தின் பெரும்பாலான பாகங்கள் ஏறக்குறைய எரிந்து சாம்பலாகிவிட்டன.

2023-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் நிரந்தரமாக விண்வெளிநிலையம் அமைக்கும் நோக்கில், அதற்கு முன்னோட்டமாக 2011-ம் ஆண்டு சீனா டியான்காங்-1 என்ற விண்வெளி மையத்தின் மாதிரியை அனுப்பியது.

இந்த விண்வெளி ஓடத்தின் மூலம் பல்வேறு ஆய்வுகளையும், தனது நிரந்தர விண்வெளி மையத்தை அமைக்கும் பணிகளையும் சீனா செய்து வந்தது.  34 அடி நீளம் கொண்ட இந்த விண்வெளி ஓடம், சீனாவின் விண்வெளி ஆய்வுத் திட்டத்தில் முக்கியமானதாக இருந்தது.

இதற்கிடையே கடந்த 2016-ம் ஆண்டு டியான்காங் விண்வெளிநிலையம் சீனாவில் உள்ள கட்டுப்பாட்டு மையத்து்டன் தொடர்பை இழந்துவிட்டது. விண்வெளியில் சுற்றிக்கொண்டிருந்த இந்த விண்கலம் மீண்டும் பூமியின் சுறுப்பாதைக்குள் நுழைய முயன்றபோது, பிரேசில் கடற்பகுதியில் உள்ள பசிபிக் கடலில் விழுந்தது.

சா போலா, ரியோ டி ஜெனிரோ ஆகிய நகரங்களுக்கு அருகே இருக்கும் கடல்பகுதியில் இந்த விண்கலத்தின் உடைந்த பாகங்கள் காணப்படுகின்றன.

உண்மையில் இந்த டியான்காங்-1 விண்கலம் கடந்த 2013-ம் ஆண்டு செயல் இழக்கவைக்கப்பட்டு, அழிக்கப்பட இருந்தது. ஆனால், இந்த விண்கலம் தொடர்ந்து இயங்கி வந்தது. ஆனால், 2016ம் ஆண்டுக்கு பின் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொடர்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.

 

[X] Close