[X] Close

போருக்கு தயாராக இருங்கள்!- ராணுவத்துக்கு சீன அதிபர் உத்தரவு


xi-urges-chinese-army-to-be-battle-ready

  • பாரதி ஆனந்த்
  • Posted: 05 Jan, 2019 15:57 pm
  • அ+ அ-

எந்த நேரத்திலும் போரை எதிர்கொள்ளும் வகையில் தயாராக இருக்கும்படி சீன ராணுவத்தினருக்கு அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் அறிவுறுத்தியிருக்கிறார்.

தென் சீனா கடற்பகுதியில் உள்ள தைவான் உள்ளிட்ட நாடுகளுடன் சீனாவுக்கு தொடர்ந்து பிரச்சினை நிலவுகிறது. காரணம் தென் சீனா பகுதியில் உள்ள தீவுகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருவதால் ராணுவ பலத்தின் மூலம் அத்துமீற சீனா முயன்று வருவதாகக் கூறப்படுகிறது. 

அண்மையில்கூட, தைவானும், சீனாவும் ஒரே நாடுதான். எனவே, தைவான் தனியாக இயங்குவதற்கு அனுமதிக்க முடியாது. அதை சீனாவோடு இணைப்பதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்வோம். தேவைப்பட்டால் போர் நடவடிக்கைகள் எடுக்கவும் தயங்க மாட்டோம் என சீன அதிபர் கூறியிருந்தார்.

தைவானுக்கு அமெரிக்கா பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. ஏற்கெனவே,  அமெரிக்காவுடனும் வர்த்தகப் போர் நீடித்து வரும் நிலையில் தைவான் பிரச்சினையில் அமெரிக்காவின் நிலைப்பாடு சீனாவை எரிச்சலடையச் செய்கிறது.

இந்நிலையில் வெள்ளியன்று ராணுவ தலைமை அதிகாரிகளுடன் அதிபர் ஜி ஜின்பிங் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் அவர்,  சீன ராணுவம் எந்த நேரத்திலும்  போருக்கு தயாராக இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்.

இதுகுறித்து ஜிங்பிங் வெளியிட்டுள்ள உத்தரவில், '' புதிய யுகத்துக்கான கொள்கைகளை ராணுவப் படைகள் வகுக்க வேண்டும். போரை எதிர்கொள்வதற்கான பொறுப்புகளை ஏற்று ஆயத்தமாக வேண்டும். புதிய யுகத்தில் உலகம் புதிய பெரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது.

சீனா இன்னமும் வளர்ச்சிக்கான சந்தர்ப்பங்களை சாத்தியப்படுத்திக் கொள்ளும் முக்கியமான காலகட்டத்தில்தான் இருக்கிறது. 
பாதுகாப்பு யுக்திகளை திறமையாக கையாள்வது மற்றும் வளர்ச்சி அடைவது என 2 முக்கிய வேலைகளை சீனா செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

நெருக்கடி காலங்களில் துரிதமாக பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவம் தரம் உயர்த்தப்பட்டிருக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close