[X] Close

வடகொரிய அதிபரை சந்திக்க டொனால்டு ட்ரம்ப் விருப்பம்


donald-trump-s-wish-to-meet-the-north-korean-chancellor

  • kamadenu
  • Posted: 03 Jan, 2019 10:04 am
  • அ+ அ-

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை மீண்டும் சந்தித்து ஆலோசனை நடத்த விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கிம் ஜாங் உன்னின் மறைமுக எச்சரிக்கையின் எதிரொலியாகவே ட்ரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளதாக கருதப்படுகிறது. வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தியதால் அதன் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்கு பணிந்த வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், தங்கள் நாட்டில் உள்ள அணு ஆயுதங்களை அழித்து விடுவதாக பகிரங்கமாக அறிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக, கடந்த ஆண்டு ஜுன் மாதம் டொனால்டு ட்ரம்பும், கிம் ஜாங் உன்னும் சிங்கப்பூரில் சந்தித்து பேசினர். அப்போது, வட கொரியாவில் உள்ள அணு ஆயுதங்களை அழிப்பது தொடர்பான 4 அம்ச தீர்மானம் கையெழுத்தானது. இதற்கு பிரதிபலனாக, வட கொரியா மீதான பொருளாதார தடைகள் திரும்பப் பெறப்படும் என அமெரிக்கா தெரிவித்தது. எனினும், அந்த தீர்மானத்தை செயல்படுத்துவதில் இரு நாடுகளுமே சுணக்கம் காட்டி வருவதாக தெரிகிறது.

இந்நிலையில், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் நேற்று முன்தினம் ஆற்றிய புத்தாண்டு உரையில் இந்த விவகாரத்தை எழுப்பியிருந்தார். அதில், "வட கொரியா மீது பொருளாதார தடைகள் நீடித்தால் தாங்கள் மாற்றுப் பாதையை நோக்கி செல்ல வேண்டி வரும்" என கிம் ஜாங் உன் தெரிவித்திருந்தார். இது அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையாவே சர்வதேச அளவில் கருதப்பட்டது.

இந்த சூழ்நிலையில், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை மீண்டும் சந்தித்து பேச ஆர்வமாக இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் டொனால்டு ட்ரம்ப் நேற்று தெரிவித்துள்ளார். இதனால், இரு நாட்டு தலைவர்களுக்கு இடையே மீண்டும் சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'எல்.கே.ஜி' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close