[X] Close

தாய் அன்புக்கு ஈடு இல்லை: போப் பிரான்சிஸ்


mother-s-love-is-not-offset

  • kamadenu
  • Posted: 02 Jan, 2019 11:39 am
  • அ+ அ-

தாய் அன்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்று போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டையொட்டி வாடிகன் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனையை போப் நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:சில நேரங்களில் பிள்ளைகள் தவறான பாதையைத் தேர்ந்தெடுக்கின்றனர். தாய் அன்பை மறந்து கண் போன போக்கில் செல்கின்றனர். ஆனால் எந்தவொரு தாயும் பிள்ளைகளை வெறுப்பது இல்லை.

தனது அன்பால் அவர்களை நல்வழிப்படுத்துகிறாள். இதில் ஏழை, பணக்காரர் வித்தியாசம் இல்லை. உலகின் உண்மையான ஹீரோக்கள் தாய்மார்கள். தாய் அன்புக்கு உலகில் ஈடு இணை எதுவுமே இல்லை. தாயின் அன்பு இல்லாமல் உலகமே இல்லை. தாயின் அன்பை நினைவுகூர்ந்து இந்த புத்தாண்டில் நாம் அனைவரும் உலகம் முழுவதும் அன்பை பரப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close