[X] Close

அணுசக்தி நிலையங்களின் பட்டியல் இந்தியா - பாகிஸ்தான் பரிமாற்றம்


list-of-nuclear-power-centers-india-pakistan-exchange

  • kamadenu
  • Posted: 02 Jan, 2019 11:35 am
  • அ+ அ-

இந்தியாவும் பாகிஸ்தானும் தத் தமது நாடுகளில் செயல்படும் அணு சக்தி நிலையங்களின் பட்டியலை நேற்று பரிமாறிக்கொண்டன.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் ஏற்படுமானால் அணுசக்தி நிலையங்களை தாக்கு வதில்லை என இருநாடுகளும் ஒப்பந்தம் செய்துள்ளன.

1988-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி கையெழுத்தான இந்த ஒப்பந்தம் 1991-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி அமலுக்கு வந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ம் தேதி அணுசக்தி நிலையங்களின் பட்டியலை பரிமாறிக் கொள்ளவும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. இதன்படி முதல்முறையாக 1992-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி பட்டியல் பரிமாறிக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் 28-வது ஆண்டாக இந்தப் பட்டியல் நேற்று பரிமாறிக்கொள்ளப்பட்டது.

இதற்கான நிகழ்ச்சி இஸ்லாமா பாத்தில் உள்ள இந்தியத் தூதரத்திலும் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திலும் நேற்று காலையில் ஒரே நேரத்தில் நடந்தது. இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சகங்கள் சார்பில் இந்தப் பட்டியல் ஒப்படைக்கப்பட்டது.

இந்தியா பாகிஸ்தான் இடையிலான உறவில் ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும் அணுசக்தி நிலையப் பட்டியல் பரி மாற்றம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதுபோல் இரு நாடுகளிடையே கைதிகள் பட்டியலும் நேற்று பரிமாறிக்கொள்ளப்பட்டது.

பாகிஸ்தான் சிறையில் வாடும் 537 இந்தியர்களின் பட்டியல் (483 மீனவர்கள், 54 சிவலியன்கள்) இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் ஒப்படைக் கப்பட்டது. இதுபோல் இந்தியச் சிறைகளில் உள்ள பாகிஸ்தானி யர்களின் பட்டியல் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கான ஒப்பந்தம் கடந்த 2008-ம் ஆண்டு மே 21-ம் தேதி கையெழுத்தானது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close